கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் 2,83,88,100 பேர் மீண்டனர் - 3,79,573 பேர் மரணம்
நாடு முழுவதும் ஒரே நாளில் 2542 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,65,432 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 72 நாட்களில் மிகக்குறைந்த பாதிப்பு ஆகும். மொத்த பாதிப்பு 2,96,33,105 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத் தொடங்கிய நிலையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 72 நாட்களில் மிகக்குறைந்த பாதிப்பு ஆகும். மொத்த பாதிப்பு 2,96,33,105 ஆக உயர்ந்துள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் சரிந்து, தற்போது 4.17 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு 3.22 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதமானது 9 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் 95.80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 2542 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.28 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை விட குறைவாகவே உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,65,432 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 26,19,72,014 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
-
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி












Click it and Unblock the Notifications