தமிழகம் நோக்கி வரப்போகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னைக்கு மழை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வீடியோ

    சென்னை: வங்கக் கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    நாளை மாலை மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

    நவம்பர் 19, 20ம் தேதிகளில் மேற்கு திசையில், மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக 19, 20, மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழக பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

    மழை அளவு

    மழை அளவு

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 17 சென்டிமீட்டர், கொடைக்கானலில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அரபிக் கடல்

    அரபிக் கடல்

    மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தளவில், கஜா காரணமாக, அரபிக் கடல் பகுதிகளில் 18, 19, 20ம் தேதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    வங்கக்கடல்

    வங்கக்கடல்

    மேலும் வங்கக்கடலை பொறுத்த, அளவில் மீனவர்கள், மேற்கு வங்க கடல், மத்திய வங்கக்கடல் பகுதியில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை வானிலை

    சென்னை வானிலை

    சென்னையை பொறுத்தளவில், வரும் 19 அல்லது 20ம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளில் பரவலாக மழை இருக்கும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+