வருமான வரி.. Regime மாறுவது எப்படி? எந்த முறை தற்போது சிறப்பானது? இதுதான் ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 1ம் தேதி.. அதாவது நேற்று முதல் நீங்கள் உங்கள் வருமான வரி regime ஐ மாற்ற முடியும். இந்த நிதி ஆண்டில் நீங்கள் தேர்வு செய்ய போகும் வருமான வரி regime ஐ எளிதாக தேர்வு செய்ய முடியும். கடந்த பட்ஜெட்டில்தான் புதிய வருமான வரி regime மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது. பழைய regime ல் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அப்படி இருக்க உங்களுக்கு பின்வரும் சந்தேகங்கள் இருந்தால் அதற்கான பதில்கள் இங்கே தரப்பட்டு உள்ளன. நீங்கள் எந்த regime ஐ தேர்வு செய்யலாம் என்ற விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

1. 12 லட்சம் ரூபாய் வரை புதிய regime ல் வரி இல்லை என்றால் ஸ்லாப் ஏன் 4 லட்சத்தில் இருந்து துவங்குகிறது?

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

budget 2025 budget nirmala sitharaman 2025 2025

உங்கள் சம்பளத்தின் முதல்

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபாய் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபாய் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

2. புதிய வரி regime ல் முதலீடுகளை காரணம் காட்டி விலக்கு பெற முடியுமா?

புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது

3. பழைய முறையில் முதலீடுகளை காரணம் காட்டி சலுகைகளை பெற முடியுமா?

நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


4. வீட்டு வாடகைக்கு டிடிஎஸ் கட்ட வேண்டுமா?

வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிகான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார்.

பட்ஜெட் ஆவணத்தின்படி, ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை.

இதனால் சிறிய வீடுகளில் வாடகை விடுபவர்கள்.. குறைந்த வாடகைக்கு வீடுகளை விடுபவர்கள் பயன் அடைவார்கள். அதோடு பலர் புதிதாக வாடகைக்கு வீடு விடவும் வழிவகுக்கும். வாடகை வீடுகளின் எண்ணிக்கை இதனால் உயரும். நேற்று பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

5. முதலீடுகள், வீட்டு லோன் இருந்தால் எந்த முறை பெஸ்ட்;

உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

6. புதிய முறை யாருக்கு பெஸ்ட்?

உங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் இல்லை. அதேபோல் வருமானமும் வருடம் 12 லட்சம் என்றால் புதிய முறையே பெஸ்ட்.

இந்த சலுகை முதலில் எல்லோருக்கும் கிடையாது. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.

0-4 லட்சம் ரூபாய் வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய் 5 சதம்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம்
12-16 இலட்சம் ரூபாய் 15 சதம்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம்
20-24 இலட்சம் ரூபாய் 25 சதம்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்

7. பழைய முறை யாருக்கு பெஸ்ட்?

ஆனால் எனக்கு புதிய முறை வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால்.. ஒரே ஒரு காரணம் மட்டுமே உங்களிடம் இருக்க வேண்டும். அது முதலீடு அல்லது வீட்டு லோன். அதாவது நீங்கள் நிறைய முதலீடு செய்து இருந்தால், வீட்டு லோன் எடுத்து இருந்தால்.. பழைய முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதிலும் நீங்கள் முழுக்க முழுக்க சலுகைகளை பெற்று.. எந்த வரியும் கட்டாமல் தவிர்க்க முடியும். உங்களுடைய வருமானம் வருடத்திற்கு 12 லட்சத்திற்கு கீழ் இருந்தால் போதும் நீங்கள் எப்படியும் வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அதே சமயம் உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம்.

இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

8. சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி மாறுவது?:

உங்கள் எச்.ஆரிடம் இதை பற்றி அறிவிக்க வேண்டும். நிதியாண்டின் (ஏப்ரல்) தொடக்கத்தில் பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான வரி விதிப்பைத் தேர்ந்தெடுக்குமாறு எச். ஆர் உங்களிடம் கேட்பார்கள். அப்போது நீங்கள் தெரிவிக்கலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு முறையை தேர்ந்தெடுத்திருந்தாலும், மாற்ற விரும்பினால், உங்கள் எச். ஆரிடம் கூறலாம். ஆண்டின் நடுப்பகுதியில் மாற்றங்களை அனுமதித்தால் மாறிக்கொள்ளலாம்..

இல்லையென்றால் ஜூலை 31ம் தேதிக்கு முன் நீங்கள் ஐடிஆர் பைல் செய்யும் போது வருமான வரி பிரிவை மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் சம்பளம் வாங்கும் நபர் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் பழைய - புதிய வரி முறை இடையே மாற முடியும். நீங்கள் சொந்தமாக பிஸ்னஸ் செய்பவர் என்றால் அதற்காக Form 10-IE ஐ நிரப்ப வேண்டும். பிஸ்னஸ் செய்பவர்கள்.. ஒருமுறை பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறிவிட்டீர்கள் என்றால் மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே பழைய முறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+