பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. ஏப்ரல் 1 முதல் சொத்து, சம்பளத்தில் அந்த வருமான வரி ஜாக்பாட்
சென்னை: புதிய வருமான வரி விதிகள் 2026 (New Income Tax Rules 2026), 60 ஆண்டுகாலப் பழைய சட்ட நடைமுறைகளை எளிமையாக்கி வரும் ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. சாதாரண வரி செலுத்துவோர் மற்றும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் வரிச் சலுகை வரம்புகள் பலமடங்கு உயர்த்தப்பட்டு, சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நடுத்தர வர்க்கத்தினரின் வரி சுமையை குறைக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரி விதிகள், சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மிக முக்கியமான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளன.

வருமான வரி புதிய விதிகள்
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய வரிச் சட்டத்திற்குப் பதிலாக, தற்போது "வருமான வரிச் சட்டம் 2025" மற்றும் அதற்கான புதிய விதிகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றத்தின் மிக முக்கியமான நோக்கம், வரி செலுத்தும் முறையைச் சிக்கலில்லாமல் மாற்றுவதும், தேவையற்ற சட்டப் பிரிவுகளைக் குறைப்பதுமாகும்.
முன்னதாக 819 பிரிவுகளை கொண்டிருந்த இந்தச் சட்டம், இப்போது 536 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.. இதனால் சட்டத்தின் கடினத்தன்மை குறைந்து, சாதாரண மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் 23 அதிகாரங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வாடகை வீட்டுதாரர்களுக்கு ஜாக்பாட்
இந்த புதிய விதிகளில் Salaried class tax அதாவது சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய நிம்மதி என்னவென்றால், வீட்டு வாடகை படி தொடர்பான சலுகை விரிவுபடுத்தப்பட்டிருப்பதே ஆகும்.
இதுவரை HRA exemption new cities அதாவது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே 50 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பெங்களூரு, புனே, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த 8 நகரங்களில் வாடகை வீட்டில் வசிக்கும் ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரை வரி விலக்கு பெற முடியும். மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு 40 சதவீத விலக்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
சலுகைகள் - நடுத்தர வர்க்கம்
அடுத்த முக்கியமான விஷயம், அன்றாட வாழ்க்கை செலவுகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகை வரம்புகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாய் என்று இருந்த கல்விப் படி சலுகை, தற்போது 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளுக்காக வழங்கப்பட்ட 300 ரூபாய் சலுகை, இனி 9,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆபீஸில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கூப்பன் விலக்கு வரம்பு 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் ஆறுதலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கான படிகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
பணப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, இனி 5 லட்ச ரூபாய்க்கு மேல் கார் போன்ற வாகனங்கள் வாங்கும்போது பான் கார்டு கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஷேர் மார்க்கெட் பரிவர்த்தனை
ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரெண்ட்டுகளில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் செலுத்த முடியாது. இதற்கு முன்பு இந்த வரம்பு 50,000 ரூபாயாக இருந்தது. மேலும், அசையா சொத்துக்கள் வாங்கும் போது 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு விபரங்களை அளிக்க வேண்டும்.
ஷேர்மார்க்கட்டை பொறுத்தவரை, ஒரு நிறுவனம் தனது பங்குகளைத் திரும்பப் பெறும்போது (Buyback) முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபம், இனி மூலதன ஆதாய வரியின் கீழ் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, தேவையற்ற படிவங்களைக் குறைத்து, வரி செலுத்துவோருக்கு அதிகப் பலன்களைத் தரும் வகையில் இந்த புதிய விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன...!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications