செம.. வருமான வரி விதிப்பு மாற்றத்தால்.. இனிமேல் ரூ.83 ஆயிரம் முதல்.. 1.14 லட்சம் வரை சேமிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி (New Income Tax Slab) விதிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. யார் யாருக்கு எவ்வளவு பலன் கிடைக்கும், எப்படி கணக்கிடப்படுகிறது (Calculation) என்பன உட்பட பல சந்தேகங்களுக்கு இங்கே தெளிவுரை தந்துள்ளோம்.

முந்தைய வருமான வரி முறையில், அதிக வருமானம் உள்ளவர்களுக்கு அதிக வரி செலுத்த வேண்டி இருந்தது. புதிய முறையில், வருமான வரம்பு மற்றும் வரி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30% வரி செலுத்தும் உச்ச வரம்பு வருமானம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடுத்தர மற்றும் உயர் வருமானம் உள்ளவர்களுக்கு வரிச்சுமை குறையும்.

income tax budget 2025 2025

யார் யாருக்கு எவ்வளவு பலன்?

புதிய முறையில், அதிகபட்ச பலன், ரூ. 12,75,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் வருமான வரி எதுவும் செலுத்த தேவையில்லை. அதேபோல, அதிக வருமானம் உள்ளவர்களுக்கும் கணிசமான வரி குறைப்பு உள்ளது. உதாரணமாக, ரூ. 25,00,000 வருமானம் உள்ள ஒருவர், புதிய முறையில் சுமார் ரூ. 1,14,400 வரை சேமிக்க முடியும்.

எப்படி கணக்கிடப்படுகிறது?

வருமான வரி கணக்கிடுவது எளிதானது. உங்கள் மொத்த வருமானத்தில் இருந்து, அரசாங்கம் அனுமதிக்கும் சில கழித்தல்களை (deductions) கழித்த பிறகு, மீதமுள்ள தொகைக்கு புதிய வரி விகிதப்படி வரி கணக்கிடப்படும். ஒவ்வொரு வருமான வரம்புக்கும் ஒரு குறிப்பிட்ட வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் தெரிந்ததுதான். ஆனால், நிர்மலா சீதாராமனின் இந்த பட்ஜெட் அறிவிப்பின்படி, 12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் கழித்தல்களை அதாவது ப்ரூப் காட்ட தேவையில்லை. இது புது வருமான வரி முறைப்படியான சலுகையாகும், புது வருமான வரி பிரிவில் கழித்தல்களை காட்ட ஏற்கனவே வழியே கிடையாது. அது பழைய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே யாரும் குழம்ப தேவையில்லை. 12 லட்சம் வரை நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு எந்த கணக்கும் காட்ட தேவையில்லை என்பதே பட்ஜெட் அறிவிப்பின் உள் அர்த்தம். இதைத்தான் Rebate என்கிறார்கள். அதாவது முழு தள்ளுபடி.

உதாரணங்கள்:

income tax budget 2025 2025

ரூ. 12,75,000 வருமானம்:

  • பழைய முறையில்: ரூ. 83,200 வரி செலுத்த வேண்டும்.
  • புதிய முறையில்: வரி எதுவும் செலுத்த தேவையில்லை.
  • சேமிப்பு: ரூ. 83,200

ரூ. 15,00,000 வருமானம்:

  • பழைய முறையில்: ரூ. 1,30,000 வரி செலுத்த வேண்டும்.
  • புதிய முறையில்: ரூ. 97,500 வரி செலுத்த வேண்டும்.
  • சேமிப்பு: ரூ. 32,500

ரூ. 16,00,000 வருமானம்:

  • பழைய முறையில்: ரூ. 1,53,400 வரி செலுத்த வேண்டும்.
  • புதிய முறையில்: ரூ. 1,13,100 வரி செலுத்த வேண்டும்.
  • சேமிப்பு: ரூ. 40,300

ரூ. 20,00,000 வருமானம்:

  • பழைய முறையில்: ரூ. 2,78,200 வரி செலுத்த வேண்டும்.
  • புதிய முறையில்: ரூ. 1,92,400 வரி செலுத்த வேண்டும்.
  • சேமிப்பு: ரூ. 85,800

ரூ. 24,75,000 வருமானம்:

  • பழைய முறையில்: ரூ. 4,26,400 வரி செலுத்த வேண்டும்.
  • புதிய முறையில்: ரூ. 3,12,000 வரி செலுத்த வேண்டும்.
  • சேமிப்பு: ரூ. 1,14,400

ரூ. 25,00,000 வருமானம்:

  • பழைய முறையில்: ரூ. 4,34,200 வரி செலுத்த வேண்டும்.
  • புதிய முறையில்: ரூ. 3,19,800 வரி செலுத்த வேண்டும்.
  • சேமிப்பு: ரூ. 1,14,400

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+