Low-Pressure Area: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. ஐஎம்டி எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது வரும் 21, 22 ஆம் தேதி வாக்கில் வங்கக்கடலில் கிழக்கு, மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் இதனால் தமிழகம், கடலோரப் பகுதிகளில் கனமழை வெளுக்கும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வட, தென் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 21 ஆம் தேதி முதல் அடுத்த சில நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

New Low-Pressure Area Forming IMD Warns of Very Heavy Rain in Tamil Nadu

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக வெயில் கடுமையாக சுட்டெரித்தது. கோடைக் காலத்தில் இருந்ததை போன்று வெயில் விட்டு விளாசியது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்திய பரப்பை விட்டு விலக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பது போல, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் நாளை மறுநாள் (19 ஆம் தேதி) வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இது வரும் 21, 22 ஆம் தேதி வாக்கில் வங்கக்கடலில் கிழக்கு, மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலாக மாறுமா?

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் 21, 22 ஆம் தேதி வாக்கில் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். புயலாக மாறுமா என்றால் அடுத்தடுத்த நாட்களில் அதன் நகர்வை பொறுத்து சொல்ல முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மிக கனமழைக்கு வாய்ப்பு

இதனால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தெற்கு மற்றும் வட கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 21 ஆம் தேதி முதல் கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சில நேரங்களில் 60 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும், கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதி, மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+