வர்லாம்.. வர்லாம்..ரைட்.. வங்க கடலில் நவ.16-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்க கடலில் நவம்பர் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

தமிழ்நாட்டில் கனமழை தொடர்ந்ததால் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இக்காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்த் நாகை- அதிராம்பட்டினம் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுகுறைந்துள்ளதால் படிப்படியாக தமிழகத்தில் மழை குறைந்தும் உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

இந்நிலையில் தென் வங்க கடலில் வரும் 16-ந் தேதி (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை எச்சரிக்கை

மழை எச்சரிக்கை

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த முன்னெச்சரிக்கை விவரம்: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் புதன்கிழமை மற்றும் வியாழன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்திருந்தது.

சென்னைக்கு மழை எச்சரிக்கை?

சென்னைக்கு மழை எச்சரிக்கை?

மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

கடலில் சூறாவளி காற்று

கடலில் சூறாவளி காற்று

நாளை லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 16-ந் தேதி தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+