சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, பெற்றோர், மாணவர்களிடம் இன்று கருத்து கேட்பு

Google Oneindia Tamil News

சென்னை: புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, தமிழகத்தில் பெற்றோர், மாணவர்களிடம் இன்று ஆன்லைன் மூலம் கருத்து கேட்பு நடைபெறுகிறது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.

New National Education Policy 2020: Parents and Students Feedback Session via Online in Tamil Nadu

இந்நிலையில புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்பது தொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளரும், தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவருமான ஆபூர்வா, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.

இதன் அடிப்படையில் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று ஆன்லைன் மூலம் கருத்து கேட்கப்படுகிறது. இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை கருத்துகளை கேட்கிறது.

அந்தந்த பல்கலைக்கழகங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Parents and students in Tamil Nadu consulted today on the new national education policy. The Department of Higher Education has informed that the respective universities should make arrangements for this and inform the students, professors and parents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X