அவரெல்லாம் ராஜகுருவா? தலையில் அடித்துக் கொள்ளும் கொள்கை சீனியர்ஸ்!
Recommended Video
சென்னை: அந்தக் கட்சியில் அடுத்தடுத்து நடக்கப் போகும் மாற்றங்களால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் அல்ல வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் தலைவர்களும் நொந்து நூடூல்ஸ் ஆகி கிடக்கின்றனராம்.
லோக்சபா தேர்தலில் கிச்சன் கேபினட் முடிவை கேட்டு வாரிசுகளுக்கு தாராளமாக இடம் கொடுத்தது கட்சி தலைமை. தங்களது கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதற்காகவே வாரிசுகளை களம் இறக்கியது கிச்சன் கேபினட்.

ஆனால் இந்த வாரிசுகள் பட்டியலில் வடமாவட்ட படுசீனியர் மகனுக்கு இடம் கொடுப்பதில் அப்படியான ஒரு விருப்பத்தை கிச்சன்கேபினட் காட்டவில்லை. இருந்தாலும் வேண்டா வெறுப்பாக இடம் ஒதுக்கியது.
அதேநேரத்தில் கட்சி தலைமையோ சல்லி பைசா கூடா தேர்தல் பிரசாரத்துக்கு தரமாட்டோம் என அந்த வடமாவட்ட படுசீனியருக்கு கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. இதனால்தான் அள்ளாடி தள்ளாடி அந்த படுசீனியர் மகன் கரை சேர்ந்தார்.
கட்சியின் நம்பர் 3 நமக்கே இந்த நிலையா? என கந்தகமாய் வெறுத்துப் போய் தலைமையிடம் இருந்து விலகியே இருக்கிறார் அந்த சீனியர். ஆனால் லோக்சபா தேர்தலில் பொறுப்பு கொடுக்கப்பட்ட எந்த ஒரு இடத்திலும் வாக்குகளை கொண்டுவந்து சேர்க்க திராணியற்ற இன்னொரு வடமாவட்ட சோ கால்டு சீனியருக்கே கிச்சன் கேபினட் அதிக முக்கியத்துவம் தருகிறதாம்.
கட்சி, கொள்கை அதைபற்றியெல்லாம் பாலபாடம் கூட தெரியாத அந்த சோ கால்டு தலைவருக்குத்தான் மிக முக்கிய பதவி போகப் போகிறதாம். அப்செட்டில் இருக்கும் படு சீனியரை தாமரை கட்சி பாணியில் முதியோர் குழுவுக்கு அனுப்பிவிடலாம் என கருதுகிறதாம் கிச்சன் கேபினட்.
படுசீனியரை ஒதுக்கி வைப்பதற்காகவே கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பற்ற வைத்து வருகிறாராம் சோ கால்டு ராஜகுருவாக உருவெடுக்கும் வடக்கு சீனியர். கட்சியில் தகத்தகாய தலைகள் பலரும் தகுதியோடு இருக்கிறார்கள்...அவர்கள் எல்லாரையும் வலிந்து காணாமல் ஆக்கிவிட்டு எடுப்பார் கைப்பிள்ளையாக கட்சி போகிறதோ என தலையில் அடித்து கொள்கின்றனர் கொள்கை சீனியர்ஸ்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications