"ரொம்ப லேட்டாய்ரும்".. இப்பவே கொடுத்துடலாம்.. அதிகரிக்கும் "அழுத்தம்".. டிக் செய்யும் ஸ்டாலின்

திமுகவின் உதயநிதி, கனிமொழிக்கு புதிய பொறுப்பு தரப்படலாம் என்று கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு புதிய பதவியும், உதயநிதிக்கு அமைச்சர் புதிய பதவியை திமுகவில் தரப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..!

தேர்தல் ரிசல்ட்டை நோக்கி தமிழகம் காத்துள்ள நிலையில், திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக பரவி வரும் நிலையில், அடுத்தடுத்த அதிரடிகள் கட்சிக்குள் நடந்து வருகின்றன.

குறிப்பாக, உதயநிதிக்கும், கனிமொழிக்கும் பதவி தர திமுக தலைமையில் முடிவெடுத்துள்ளனர்.. இவர்கள் இருவருக்கும் பதவி எதற்காக என்பதற்கான காரணங்களும் வெளியாகி உள்ளன.

 ஐபேக் டீம்

ஐபேக் டீம்

கனிமொழிக்கு பதவி என்பதை ஐபேக் டீமே ஸ்டாலினிடம் நேரடியாக எடுத்து சொல்லி உள்ளது.. கனிமொழியின் வேகம், பேச்சு, பிரச்சாரம், அதிரடிகள் போன்றவற்றினால் தென்மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கு கனிமொழியால் உயர்ந்துள்ளது என்று ஐபேக் டீம் ஒரு ரிப்போர்ட்டையே ஸ்டாலினுக்கு தந்திருந்தது. எனவே இந்த முறை கனிமொழிக்கு பதவி என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் எந்த பதவி என்பதில்தான் யோசனை நிலவியது.

 கொடைக்கானல்

கொடைக்கானல்

இந்நிலையில், கொடைக்கானலில் லிஸ்ட் எடுக்கும்போதே சபாநாயகர் பதவிக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் பெயர் டிக் செய்திருக்கிறார் ஸ்டாலின்... சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார்... இவருக்கு அமைச்சர் பதவி தந்தால், கட்சி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை.. ஒருவேளை சபாநாயகராக பொறுப்பேற்றால், ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.

 ராஜினாமா

ராஜினாமா

அப்படி ராஜினாமா செய்தால், அந்த பதவியை மறுபடியும் ஒரு பெண்ணுக்குத்தான் தரவேண்டும் என்பதால், அந்த இடத்தில் கனிமொழியை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நாடார் சமூகத்துக்கு திமுகவில் பெரிதாக கட்சி பதவிகள் எதுவும் இல்லாத நிலையில், கனிமொழி அந்த பதவிக்கு சிறந்த சாய்ஸ் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.

திமுக

திமுக

மேலும், துணைப்பொதுச் செயலாளர் பதவியில் பெண்களுக்கான ஒரு இடத்தை ஆரம்பம் முதலே தந்து வருகிறது திமுக... எனவேதான், இந்த பதவிக்கு கனிமொழியை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, தென்மாவட்டங்களில் கனிமொழி வலுவாக இருப்பதால், இனி வரும் காலங்களில் திமுகவுக்கு தென்மண்டலம் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளதாம். அன்று அழகிரி வசம் தென்மண்டலம் இருந்தபோதும், கருணாநிதி இப்படித்தான் தைரியமாக இருந்தார் என்பதை நினைவுகூர வேண்டி உள்ளது.

 சபாநாயகர்

சபாநாயகர்

மற்றொரு பக்கம், அதிமுகவில் அருந்ததியினரை சபாநாயகராக உட்கார வைத்தாலும், அது வெறும் அலங்கார பதவியாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்தது.. ஆட்சிக்கட்டிலில் தாங்கள் இல்லையே என்று அந்த சமுதாய மக்களுக்கு எப்போதுமே வருத்தம் உள்ள நிலையில்தான், சுப்புலட்சுமியின் சாய்ஸ் அந்த சமூக மக்களுக்கு பேரானந்தத்தை தந்து வருவதாக கூறப்படுகிறது.

உதயநிதி

உதயநிதி

அதேபோல, கொடைக்கானலில் ஸ்டாலின் தயாரித்த லிஸ்ட்டில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்பதே முடிவாகவில்லையாம்.. காரணம், உதயநிதிக்கு இப்போதைக்கு பதவி தர வேணாம் என்று ஐபேக் டீம்தான் ஸ்டாலினிடம் எடுத்து சொல்லி உள்ளது. இளைஞர் அணி பதவி தந்தபோதே கட்சிக்குள் நிறைய அதிருப்திகள் எழுந்தன.. இப்போது சீட் தந்ததும் அந்த அதிருப்தி அதிகமாகிவிட்டது.. முக்கிய மாவட்டங்களில் சீனியர்கள் அதிருப்தியில் உள்ளது.. வாரிசு அரசியல் என்ற பேச்சும் கட்சிக்குள் வலுவாகி உள்ளது.. அதனால், அமைச்சர் பதவிக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் என்று எடுத்து சொன்னதாம் ஐபேக்.

ஆலோசனை

ஆலோசனை

ஆனால், இப்போதைய ஆலோசனைகள் கட்சிக்குள் வேறு மாதிரியாக உள்ளதாம்.. இந்த தேர்தலை விட்டால் அடுத்து இன்னும் 5 வருஷத்துக்கு காத்திருக்க வேண்டும்... இப்பவே உதயநிதிக்கு 43 வயசாகிறது.. அடுத்த தேர்தல் என்றால் சீனியாரிட்டி போய்விடும்.. எனவே, இந்த முறையே அமைச்சர் பதவி தந்துவிடலாம் என்று சில அழுத்தங்கள் ஸ்டாலினுக்கு சென்றதாம். இதன்பிறகே அமைச்சர் பதவி உதயநிதிக்கு உறுதியாகி உள்ளதாக கூறுகிறார்கள்.

 செல்வாக்கு

செல்வாக்கு

இது எல்லாவற்கும் மேலாக, கொங்கு மண்டல மக்களுக்கும், தென்மண்டல மக்களுக்குமான ஒரு பிரதிநிதியை சட்டசபைக்கு அனுப்புவதால் அந்த இரு மண்டலங்களிலும் திமுகவின் செல்வாக்கு பெருகுவதுடன், பெண்களுக்கான முக்கியத்துவத்தையும், அங்கீகாரத்தையும் திமுக என்றுமே தந்து கொண்டுதான் இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாக போகிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+