Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றே மாற்றப்படும் தமிழக காங்கிரஸ் தலைவர்? மாஜி ஐஏஎஸ் சசிகாந்திற்கு பதவி? அப்போ செல்வப்பெருந்தகை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவர் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. காங்கிரஸ் கமிட்டியில் இன்று அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளதாக கடந்த சில காலமாகவே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதன்படியே இன்று தலைவர் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.

New president for Tamil Nadu Congress to be announced today: Is Sasikanth Senthil taking charge?

தலைவர் பதவி: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது. அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மோதல் ஏற்பட்டது: இன்னொரு பக்கம் கட்சிக்கு உள்ளேயும் நிறைய கோஷ்டி மோதல்கள் நிலவி வருகின்றன. பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். அந்த கோஷ்டி மோதல் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக வெடித்தது.

ஜோதிமணி எம்பி, கோபண்ணா போன்றவர்கள் பொது தளத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தெல்லாம் விவாதம் செய்தனர். இப்போது இந்த கோஷ்டி மோதல் உச்சம் தொட்டுள்ளது. அப்போதே காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன.

இன்று மாற்றப்படுகிறார்: இந்த நிலையில்தான் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவர் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. காங்கிரஸ் கமிட்டியில் இன்று அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ் நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் தலைவராக செல்வப்பெருந்தகை உள்ளார்.

இவருக்கு பதிலாக மூத்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த பதவிக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் செல்வப்பெருந்தகையின் பதவி பறிக்கப்படுவதால், அவர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் இன்னொரு பக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

New president for Tamil Nadu Congress to be announced today: Is Sasikanth Senthil taking charge?

செல்வப்பெருந்தகை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டவர்களில் ஒருவர் காங்கிரஸ் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை. மூத்த உறுப்பினரான இவர் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். சட்டசபை தேர்தல் சமயத்திலேயே இவர் தலைவர் ஆகும் வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் அதன்பின் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். இது கிட்டத்தட்ட மாநில கட்சித் தலைவர் பதவிக்கு இணையானது. மாநில கட்சித் தலைவருக்கு இருக்கும் பல்வேறு அதிகாரங்கள் இவருக்கு உள்ளது. இதனால் இவருக்கு கூடுதலாக இன்னொரு பவர்புல் பொறுப்பு கொடுக்கப்படாது என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே முக்கிய பதவி இவரிடம் உள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

சசிகாந்த் செந்தில்: இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. மாஜி ஐபிஎஸ் அண்ணாமலைக்கு போட்டியாக மாஜி ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர்களிடம் சமீபத்தில் மிஸ்ஸான அந்த ஆக்டிவ் குணமும், ஈர்ப்பும் இவரிடம் உள்ளது. எளிதில் அணுக கூடிய தலைவராகவும் இருக்கிறார். இளம் தலைவர் என்பதால் இயல்பாகவே இவரிடம் ஆக்டிவ் அரசியல் குணம் உள்ளது. அதோடு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடும் இவர் இணக்கமாக இருக்கிறார்.

தேசிய அளவிலும் கவனிக்கப்பட்ட தலைவராக இருக்கிறார். மற்ற சில தலைவர்களோடு இணக்கமாக செல்வார் என்பதால் கோஷ்டி மோதலுக்கு இவர் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன இப்படி பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சசிகாந்த் நியமிக்கப்பட காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவே அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

New president for Tamil Nadu Congress to be announced today: Is Sasikanth Senthil taking charge?

ஒருவேளை கட்சித் தலைவர் மாற்றப்பட்டால் சசிகாந்த் செந்திலுக்கு அதில் அதிக வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் வருகின்றன. கர்நாடக வெற்றி: சமீபத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றியவர்களில் முக்கியமான நபராக அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் பார்க்கப்படுகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி நிர்வாகி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பணியாற்றினார்.

இவர் சமூக வலைதள பிரச்சாரம், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது, விளம்பரம் கொடுப்பது, நவீன் வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை கவனித்துக்கொண்டார். இவரின் சிறப்பான பணிகள் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. தனக்கு கீழே பெரிய டீம் வைத்துக்கொண்டு சத்தமே இன்றி இவர் தேர்தல் பணிகளை செய்தது காங்கிரஸ் கட்சியின் மேலிட கவனத்தை ஈர்த்து உள்ளது.இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்திற்கும் தேர்தல் கண்காணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டு உள்ளார். லோக்சபா தேர்தலை மனதில் வைத்து இவர் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவராகிறாராம்.

கர்நாடக வெற்றி: சமீபத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றியவர்களில் முக்கியமான நபராக அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் பார்க்கப்படுகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி நிர்வாகி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பணியாற்றினார்.

இவர் சமூக வலைதள பிரச்சாரம், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது, விளம்பரம் கொடுப்பது, நவீன் வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை கவனித்துக்கொண்டார். இவரின் சிறப்பான பணிகள் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. தனக்கு கீழே பெரிய டீம் வைத்துக்கொண்டு சத்தமே இன்றி இவர் தேர்தல் பணிகளை செய்தது காங்கிரஸ் கட்சியின் மேலிட கவனத்தை ஈர்த்து உள்ளது.இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்திற்கும் தேர்தல் கண்காணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டு உள்ளார். லோக்சபா தேர்தலை மனதில் வைத்து இவர் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவராகிறாராம்.

யார் இவர்?: சென்னையைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். 2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவருக்கு போஸ்டிங் போடப்பட்டது. உதவி ஆணையராக இவர் பணியாற்றினார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார்.

இவர் பதவியில் இருந்த போது பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் சில கோரிக்கைகளை இவர் கேட்க மறுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தலையாட்டி பொம்மையாக இல்லமால் இவர் நேர்மையான தலைவராக இருந்துள்ளார். முக்கியமாக தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.

மோடி: முக்கியமாக பிரதமர் மோடி மீது நேரடியாக பல குற்றச்சாட்டுகளை சசிகாந்த் செந்தில் அப்போது வைத்தார். அங்கே பாஜக பல ஊழல்களை செய்வதாகவும் கூறினார். இதையடுத்து காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார். அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது. தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார். முக்கியமாக கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.

என்னென்ன பணி?: முக்கியமாக நவீன ஆன்லைன் பணி, சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்வது, வேட்பாளர்கள் பற்றிய இமேஜை உருவாக்குவது என்று சிறப்பான பணிகளை மேற்கொண்டார். இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. இன்னொரு பக்கம் அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் - அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது. இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த்தான் வெற்றிபெற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+