புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் விநியோகம்.. தமிழக அரசு வெளியிட்ட இரண்டு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி நேற்று முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு பேசும் போது, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 19 லட்சத்து 62 ஆயிரத்து 717 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்க இருக்கிறோம். இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 452 பேர் தபால் மூலம் நகல் அட்டை பெற்றிருக்கிறார்கள் என்றார்.

சட்டசபையில் உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என சொன்ன வாக்குறுதி என்ன ஆனது? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள்.

New ration cards to be distributed soon Two good news released by the Tamil Nadu government

குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500

இதற்கு பதிலளித்து அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், 1.9.2025 முதல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார் என இந்த பதிலுரையில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் கொள்முதல் செய்த நெல்லின் அளவை காட்டிலும், நாங்கள் 5 ஆண்டுகளிலேயே கூடுதலாக கொள்முதல் செய்திடுவோம் என்ற நிலையை எட்டிக்கொண்டிருக்கிறோம்.

200 டன் கொள்முதல்

தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 20 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து மூட்டைகளில் இல்லாமல் மொத்தமாக நெல் கொள்முதல் செய்து, தானியங்கி முறையில் சுத்தம் செய்து, துல்லிய எடையுடன் சாக்குப் பைகளில் நிரப்பி தைத்து, கன்வேயர் மூலமாக லாரிகளில் ஏற்றும் முறையில் நாளொன்றுக்கு 200 டன் கொள்முதல் செய்யும் அத்திறன் கொண்ட நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

ஒரத்தநாடு

சோதனை முறையில் இதை செயல்படுத்திட தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பஞ்சந்திக்கோட்டை கிராமத்தில் சுமார் ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிதிறன் கொண்ட நெல் கொள்முதல் நிலையம் கடந்த மார்ச் 29-ந் தேதி திறக்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நெல் சேமிப்பு வளாகங்கள்

2025-2026-ம் நிதியாண்டில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 3 லட்சத்து 12 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வளாகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,015 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 600 டன் கொள்ளளவு கொண்ட 87 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் பொது வினியோக திட்ட கிடங்குகள் கட்டுவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

அதிமுக எம்எல்ஏ கேள்வி

இதனிடையே அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா பேசுகையில், "ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது வழக்கமான பணியைத் தவிர, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு அளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுபோன்ற கூடுதல் வேலைப்பளு ஏற்படும்போது, ஒரு கார்டுக்கு 10 ரூபாய் தரப்பட வேண்டுமென்ற கோரிக்கை பணியாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

கூடுதல் வேலைப்பளு

ஆனால், குறைந்தபட்சம் 5 ரூபாயாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், வெறும் 50 பைசா மட்டும் தான் தரப்பட்டிருக்கிறது. இனி வருங்காலங்களில் கூடுதல் வேலைப்பளு ஏற்படும்போது, ஒரு கார்டுக்கு ரூ.5 என்ற வீதத்தில் தர வேண்டும். பெரும்பாலான நியாய விலை கடைகள் பழுதடைந்த கட்டிடங்களில் செயல்படுகிறது. அங்கு கழிவறை வசதி இல்லை என்றும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கழிவறையுடன் ரேஷன் கடைகள்

இதற்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளிக்கையில். நியாய விலை கடைகளில் பெண்கள் வேலை பார்க்கிறார்கள், கழிவறை வசதி வேண்டுமென்று நீங்கள் சொன்னீர்கள். இப்போது கட்டப்படுகின்ற அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதி இருக்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது அதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

புதிய ரேஷன் கார்டு

இதேபோல் ரேஷன் கார்டு விநியோகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 19 லட்சத்து 62 ஆயிரத்து 717 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்க இருக்கிறோம். இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 452 பேர் தபால் மூலம் நகல் அட்டை பெற்றிருக்கிறார்கள்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+