அதிமுக அதிருப்தி அணிக்குள் புதிய பிளவு.. கூட்டத்தை புறக்கணித்த சிவி சண்முகம்.. காமராஜ் எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் பல்வேறு நிர்வாக மாற்றங்களைச் செய்துள்ளார். இதனால் கட்சியினர் பலரும் அதிருப்தி அடைந்துள்ளதால் கருத்து வேறுபாடுகள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளன. விழுப்புரம் மாவட்டத்திற்கான கட்சியின் ஆய்வுக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புறக்கணித்திருந்த நிலையில், திருவாரூர் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது அதிமுக. இதையடுத்து, கட்சியின் செயல்பாடுகளை மாவட்ட வாரியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். விழுப்புரம், திருவாரூர், சேலம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

new-rift-within-the-aiadmk-dissident-faction-cv-shanmugam-boycotts-meeting

விழுப்புரம் மாவட்டத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளரான சிவி சண்முகம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முன்னாள் அமைச்சரகளான விஸ்வநாதன், தங்கமணி, எஸ்பி வேலுமணி ஏற்கனவே கட்சித் தலைமையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அதே நிலைப்பாட்டை தற்போது சிவி சண்முகமும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

அதேசமயம், முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் திருவாரூர் மமாவட்ட ஆயவுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பு லீமா ரோஸ், ஹரி உள்ளிட்ட அதிருப்தி அணியைச் சேர்ந்த சிலர் திருச்சி, திருவள்ளூர் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அதிருப்தி அணிக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை, அவர்களுக்குள்ளேயே ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளது என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது.

அண்மையில் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் மாற்றம் செய்து அறிவித்திருந்தார். இதில், பல முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து பொறுப்புகள் பறிக்கப்பட்டு, புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அதனை ஏற்க விருப்பமில்லை என அதிருப்தி அணியைச் சேர்ந்த பலர் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நிர்வாகிகள் சிலர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் பலர் அண்மையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். இதுவும் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தது.

விழுப்புரம் மாவட்ட ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி கூறியதாவது: கட்சியின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்கு சிவி சண்முகமே பொறுப்பு என்று குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+