"எல்லாமே ஒரே இடத்துல.." அபராதத்தையும் இனி இ-சேவை மையத்திலேயே கட்டலாம் - புதிதாக 194 சேவைகள்!
சென்னை: இ-சேவை 2.0 திட்டத்தில் புதிதாக 194 சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்பத்துறை முடிவு செய்துள்ளது.
இ-சேவை மையங்கள் மூலமாக வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட அரசின் பல்வேறு துறைகளின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தில் புதிதாக 194 சேவைகள் இணைக்கப்படவுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்களிலேயே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இ-சேவை மையங்கள்
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொது இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் உள்ள 580 மையங்கள் உட்பட பல்வேறு முகமைகளின் கீழ் 10,818 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
இ-சேவை மையங்கள் மூலமாக வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட அரசின் பல்வேறு துறைகளின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இ-சேவை 2.0
தமிழ்நாட்டில் விரைவில் இ-சேவை 2.0 பயன்பாட்டுக்கு வரும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார்.
பேரவையில் அமைச்சர் பேசுகையில், "இ-சேவை 2.0 என்ற திட்டம் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கு என்று தனியாக ஒரு செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு செய்து அதன்மூலம் பலமுறை சேவைகளை பெற முடியும்." எனத் தெரிவித்தார்.

புதிதாக 194 சேவைகள்
இ-சேவை 2.0 திட்டத்தில் புதிதாக 194 சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்பத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குனரகம், வருவாய் நிர்வாகத்துறை, அண்ணா பல்கலைக்கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, கால்நடைத் துறை, சென்னை போக்குவரத்து காவல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை, பள்ளிக் கல்வி துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான சேவைகள் வழங்கப்படவுள்ளன.

ஒரே இடத்தில் பல சேவைகள்
இதன் மூலம் இனிமேல் போக்குவரத்து காவல்துறை விதிக்கும் அபராதங்களையும் இ-சேவை மையங்களிலேயே சென்று செலுத்த முடியும். சென்னை மாநகராட்சி தொடர்பான கட்டணங்களையும் இ-சேவை மையங்கள் மூலமாகவே செலுத்த முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அலைச்சல் இன்றி அருகேயுள்ள இ-சேவை மையங்களிலேயே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications