'பொள்ளாச்சி போய் புளியம்பட்டி'.. தாம்பரம்- கோவை சிறப்பு ரயில்.. பாதி தமிழ்நாட்டை சுற்றி வர வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு, தாம்பரம் அதனை சுற்றியுள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு ரயில் வசதி கிடைத்துள்ளது. வார இறுதிகளில் பலருக்கும் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில் உதவும்.

ஒவ்வொருவார இறுதியிலும் சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல வேண்டும் என்றால், தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்கள் சென்ட்ரல் வரை செல்ல வேண்டும். இதேபோல் தென்சென்னை பகுதி மக்களும், சோழிங்கநல்லூர் உள்பட ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் பலரும், சென்னை சென்ட்ரலுக்கு சென்று ஏறுவதற்கு பயந்து (போக்குவரத்து நெரிசல்) ஆம்னி பேருந்துகளில் பயணிப்பதை விரும்புகிறார்கள். அதேபோல் பலர் கிளாம்பாக்கத்திற்கு சென்று அரசு பேருந்துகளில் பயணிக்கிறார்கள். ஏனெனில் தாம்பரத்தில் இருந்து கோவை செல்ல அவ்வளவாக ரயில்கள் இல்லை.. ஒரு சில ரயில்களே உள்ளன.

train tambaram coimbatore

இந்நிலையில் வாரஇறுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக அடுத்த ஒரு மாதத்திற்கு தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆனால் இந்த ரயில் தமிழ்நாட்டின் ஒரு பாதி பகுதியையே சுற்றி செல்லம் எப்படி என்றால், தாம்பரத்தில் இருந்து இரவு 6 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருபாத்திபுலியூர் (கடலூர்), சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஒட்டன்சந்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர்(கோவை) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 8.10க்கு சென்றடையும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டு சனிக்கிழமை காலை கோவைக்கு சிறப்பு ரயில் சென்றடையும். மறுமார்க்கமாக ஞாயிறு அன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திங்கள் அன்று மதியம் 12.30க்கு இந்த ரயில் தாம்பரம் வரும்" என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை நாகர்கோவில் ரயில்: தெற்கு ரயில்வே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில், , சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் (06178) வரும் 9ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06179) 10ம் தேதி நாகர்கோவிலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

சென்னை தூத்துக்குடி ரயில்: சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையேயான சிறப்பு ரயில் (06186 ) இன்று (8-ம்தேதி) இரவு 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (06187) தூத்துக்குடியில் இருந்து நாளை ( 9-ம் தேதி) மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

திருச்சி தாம்பரம் ரயில்: திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் வரும் 11-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் (06190) திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06191) தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+