கிராமங்களில் உள்ள கடைகள், இடங்கள், வணிக வளாகங்கள்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆதாரமாக குத்தகை இனங்களான கடைகள், இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குத்தகை உரிமங்கள் போன்றவை இருக்கின்றன. இவற்றை பொது ஏலத்தில் விடும்போது உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் நடைமுறையில் இல்லாமல் உள்ளது. அதனால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இதை தடுக்க கிராம-மாவட்ட ஊராட்சி இனங்களுக்கு வாடகை நிர்ணயிக்க புதிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இனிமேல் இஷ்டப்படி எல்லாம் ஏலம் விடமுடியாது என்பது உறுதியாகி உள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், "கடந்த மே மாதம் 5-ந் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த 42-வது வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடந்த வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி நீங்கலாக மற்ற மாநகராட்சிகளில் இருக்கின்ற கடைகள், வணிக வளாகங்களின் பிரச்சினையை தீர்க்க வழிக்காட்டு குழுக்கள் 2024-ம் ஆண்டு அமைக்கப்பட்டது, அதேபோல சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆதாரமாக குத்தகை இனங்களான கடைகள், இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குத்தகை உரிமங்கள் போன்றவை இருக்கின்றன. இவற்றை பொது ஏலத்தில் விடும்போது உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் நடைமுறையில் இல்லாமல் உள்ளது. அதனால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. மேலும் உள்ளாட்சிகளின் வருவாயும் பாதிக்கப்படுகிறது.
எனவே ஒரே குத்தகை தொகையை நிர்ணயம் செய்தல், முன் வைப்பு தொகை நிர்ணயம் செய்தல், குத்தகை நிபந்தனைகளை உருவாக்குதல் போன்றவற்றிற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வழிகாட்டு குழுக்கள் உருவாக்கப்படுகிறது. அதன்படி மாவட்ட கலெக்டரின் கீழ் கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊராட்சி வளர்ச்சி செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்படும் இரு வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் இருப்பார்கள். இந்த குழுவினர் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடுவார்கள்.
அதில் கிராம உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்படும் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்கள், அனைத்து வருவாய் ஈட்டக்கூடிய வரி இல்லாத இனங்கள் குறித்து விவாதித்து கிராம உள்ளாட்சிகளில் ஏற்றதாழ்வற்ற நியாயமான வருவாயினை ஈட்டுவதற்கு வழிவகை செய்வார்கள். கிராம உள்ளாட்சிகளில் வருவாய் குறித்து ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். கிராம உள்ளாட்சிகளுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களுக்கான குத்தகை இனங்கள் ஆகியவற்றுக்கு நியாயமான வாடகை, முன்வைப்பு தொகை ஆகியவற்றை நிர்ணயம் செய்ய உதவுதல்.
மேலும் ஏலம் விடுவது குறித்த வழிமுறைகள் குறித்து வகுப்பது, குத்தகை-வாடகை தொகை மறு நிர்ணயம் செய்வதற்கு கால நிர்ணயம் செய்வது, ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ள இனங்களின் வாடகையில் உள்ள குறைகளை சீரமைத்தல், ஆண்டு குத்தகை இனங்கள், பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்களுக்கான கட்டணங்கள், வாகன நிறுத்துமிடங்கள், கழிப்பறை கட்டணங்கள் ஆகியவற்றை மாற்றி அமைத்து குத்தகை விதிகளை உருவாக்குதல், வரியினங்கள் குறித்த வழிகாட்டுதல் வழங்குதல், ஆவின்-கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிலங்கள்-கட்டிடங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications