யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யுறீங்களா? எல்லாமே மாறிடுச்சு.. புது ரூல்ஸ் இதுதான்.. நோட் பண்ணுங்க
சென்னை: இந்தியாவில் யுபிஐ பயன்பாட்டில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன,. புதிதாக சில விதிகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன.
இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது. சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.

இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது.
எங்கும் யுபிஐ; அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்குகூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்களும் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர்.
மருத்துவமனை; இந்த நிலையில், மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. முன்னதாக ₹1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது 5 லட்சம் ரூபாய் வரை பணம் பரிவர்த்தனை செய்ய மருத்துவமனைகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புத்தாண்டு: இந்த நிலையில்தான் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவில் யுபிஐ பயன்பாட்டில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன,. புதிதாக சில விதிகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, Paytm செயலிகளுக்கு என்பிசிஐ அறிவுறுத்தல். மோசடிகளை தடுக்க ₹2,000-க்கு மேல் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ₹2,000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு. இதன்மூலம் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம். அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பும் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச நேரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்முறை நீங்கள் ஒரு கணக்கிற்கு 2,000 ரூபாய் அனுப்புகிறீர்கள் என்றால்.. அதன்பின் மீண்டும் அவர்களுக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications