வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. முதல் நாளிலேயே இப்படி ஒரு நிலையா? இன்னும் குட்கா கறை மட்டும்தான் பாக்கி
சென்னை: நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மேற்கு வங்கத்தின் மால்டா - அசாமின் கவுகாத்தி இடையே நேற்று முன் தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், முதல் நாள் பயணத்தின் போதே ரயில் பெட்டிக்குள் பயணிகள் குப்பைகளை வீசி அசுத்தப்படுத்தியுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தின் சென்னை - நெல்லை, சென்னை - பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
இதனால் மேற்கொண்டு அதிக ரயில் சேவைகளை இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோன்று இந்த ரயில்கள் இருக்கை வசதி என்பதாலும் தொலைதூர பயணங்களுக்கு ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்களை இயக்கினால் தான் சரியாக இருக்கும் என பயணிகள் ரயில்வேக்கு தொடர் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
இதையடுத்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்தது. இந்த படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் பின்னர் நேற்று முன் தினம் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
முதல் நாள் பயணத்திலேயே குப்பை
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இருந்து மேற்கு வங்கத்தில் ஹவுரா வரை இயக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார். இந்த பயணத்தின் மூலமாக பயண நேரம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள், தூய்மையாக இருக்கும் நிலையில் முதல் நாள் பயணத்தின் போதே குப்பைகளை பயணிகள் வீசிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🚨People litter on vande bharat Sleeper train within hours of its inaugural run.
— Indian Infra Report (@Indianinfoguide) January 18, 2026
Just see the civic sense pic.twitter.com/cCcvbJJWoL
முதல் சேவையின் போதே பயணிகள் சிலர் தண்ணீர் பாட்டில்கள், ஐஸ்கிரீம் டப்பா, டீ டப்பாக்கள், பிளாஸ்டிக் பேப்பர்களை குப்பைத் தொட்டியில் போடாமல் அப்படியே ரயில் பெட்டிக்குள்ளேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். பேப்பர் தாள்கள் ஆங்காங்கே சிதறி கிடந்து ரயில் பெட்டிகள் அசுத்தமாக காட்சியளிக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
நெட்டிசன்கள் சரமாரி கமெண்ட்ஸ்
பயணி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ள அவர், "இது யாருடைய தவறு.. இதற்கு காரணம் ரயில்வேயா? அரசா? இல்லை நமது தவறா?" என கேள்வி எழுப்பியுள்ளார். நம் மக்களின் பொது ஒழுக்கம் இப்படித்தான் இருக்கும் போல" என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறாரக்ள். "வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை இருக்கின்றது என்றும், இப்படி அதிக தொகை செலுத்தி பயணிப்பவர்களுக்கு கூட ரயில் குப்பைத் தொட்டி இருக்கும் இடம் தெரியவில்லை போல" என்று ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
குட்கா கறை மட்டும்தான் பாக்கி
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "காசு அதிகம் கொடுத்து பயணம் செய்பவர்களிடம் ஒழுக்கமும் அதிகம் இருக்கும் என நினைப்பது தவறு" என்று கூறியுள்ளார். சில நெட்டிசன்கள், "இப்படி குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடாமல் கண்டபடி வீசி செல்லும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறி வருகிறார்கள்.
இன்னும் சிலரோ, "முதல் நாள் பயணமே இப்படி இருக்கிறதா?.. குட்கா கறை மட்டும்தான் பாக்கி.. அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த ரயில் குட்கா, பீடா எச்சில் நிறைந்து காட்சியளித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications