இரவில் துணி துவைத்த குன்றத்தூர் அபிராமியின் கணவர்.. டூவீலரில் பறந்த பெண்! இப்படியும் ஹவுஸ் ஓனர்? செம
சென்னை: திருமணம் முடிந்ததுமே, மறுவீடு அழைப்பு, விருந்துகள், சம்பிரதாயங்கள் சடங்குகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை துவக்க தயாரானார்கள்.. அப்போதுதான் மாப்பிள்ளை தலையில் இப்படியொரு இடி வந்து விழுந்துள்ளது.. இது தொடர்பான விசாரணை நடந்து சுமூகமாக முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் மீண்டும் சிக்கல்கள் வந்துள்ளன. இது தொடர்பான வழக்கை சேலம் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.. என்ன நடந்தது சேலம் அழகாபுரியில்?
திருமணமான 10 நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்த நிலையில், 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. கருவை கலைக்க இன்சூரன்ஸ் ஆபீசரிடம் மாப்பிள்ளை பணம் வாங்கிய நிலையில், ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சேகர் 44 வயதாகிறது.. இவர் தர்மபுரியில் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவு மேனேஜராக உள்ளார்.. இதற்குமுன்பு சேலத்தில் உள்ள மற்றொரு இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இதற்கு பிறகு மேனேஜராக புரமோஷன் கிடைத்ததுமே, தர்மபுரிக்கு சென்று விட்டார். இவருக்கு திருமணமாகி விட்டது.. 2 குழந்தைகளும் உள்ளனர்.. எனினும், சேலத்தில் வேலை பார்த்தபோது, தன்னுடன் பணியாற்றிய திருமணமாகாத பெண் ஒருவருடன் நெருங்கி பழகியிருக்கிறார்..
தலையில் விழுந்த இடி
இதனிடையே கடந்த ஜனவரியில் அந்த பெண்ணுக்கு, அவரது வீட்டில் பெற்றோர் நல்ல வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.. ஆனால், திருமணமான 10 நாளிலேயே அந்த பெண் திடீரென வாந்தி எடுத்தார்.. இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை, புது மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். செக்கப் செய்து பார்த்தபிறகுதான், 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது..
இதைக்கேட்டு மாப்பிள்ளைக்கு தூக்கி வாரிப்போட்டது.. 10 நாளிலேயே எப்படி கர்ப்பம்? என்று மனைவியிடம் கேட்டார் மாப்பிள்ளை. இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் மணப்பெண் விழித்துள்ளார்.. பிறகு மாப்பிள்ளையின் காலில் விழுந்து, என்னை மன்னிச்சுடுங்க, உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் என்று கதறி அழுது, தன்னுடன் பணிபுரிந்த சேகர் என்பவருடன் நெருங்கி பழகியது பற்றி சொன்னார்..
புதுமாப்பிள்ளை மன்னிப்பு
உண்மையை சொல்லி கண்ணீர் விட்டு கதறியதால், மனமிறங்கிய மாப்பிள்ளை, கருவை கலைத்துவிடலாம் என்று முடிவெடுத்து, தர்மபுரியில் சேகரை சந்திக்க சென்றிருக்கிறார்.. அப்போது தன்னுடைய நண்பர் கோபால் (40) என்பவரையும் அழைத்து சென்றிருக்கிறார்..
கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் தராவிட்டால் போலீசில் புகார் தருவோம் என்று மிரட்டியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ந்த சேகர், உடனடியாக அந்த பணத்தை தந்துவிட்டார்.. இதற்கு பிறகு, அந்த பணத்தை வைத்து, கருவை கலைக்க செய்தார் கணவர்.. அத்துடன் மனைவியையும் மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
மீண்டும் முளைத்த பிரச்சனை
ஆனால், இதற்கு பிறகுதான் பிரச்சனையே கிளம்பியது.. புதுமாப்பிள்ளையுடன் சென்ற நண்பர் கோபால், சேகரை மிரட்ட துவங்கிவிட்டார்.. 80 ஆயிரம் கேட்ட பணத்தை சேகர் தந்ததால், அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவுசெய்தார்.. இதற்காகவே தர்மபுரிக்கு சென்று, சேகரை மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார்.. இப்படியே ரூ.9 லட்சம் வரை சேகரிடம் பெற்றுள்ளாராம் கோபால்.
அப்போதும் பணத்தாசை விடாத கோபால், ரூ.10 லட்சம் தந்தால், உன்னை விட்டுவிடுகிறேன் என்றாராம். அதாவது,ரூ .10 லட்சம் பணத்தை தராவிட்டால், அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிடுவோம், நீ ஜெயிலுக்கு போவாய் என்று மிரட்டியிருக்கிறார்.... இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சேகர், அழகாபுரம் போலீசில் சென்று புகார் தந்துவிட்டார்...
கதிகலங்கிய சேகர்
இந்த புகாரை விசாரித்த போலீசார், சேகரை மிரட்டியதில் கோபால் தவிர, பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட்புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.. எனவே, 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. ஆனால், கோபால் உட்பட 4 பேருமே தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
ஒரு பெண்ணிடம் பழகி கர்ப்பமாக்கிவிட்டதற்கு, ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவு செய்துவிட்டோமே? என்று கதிகலங்கி போயிருக்கிறாராம் சேகர்.












Click it and Unblock the Notifications