24 மணி நேரத்தில் பெரிய சம்பவம் நடக்க போகுது.. எடப்பாடிக்கே க்ளூ இல்லை.. உற்றுநோக்கும் அரசியல் தலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில்.. அதாவது செப்டம்பர் 5ம் தேதி தமிழக அரசியலில் பெரிய புயல் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அதிமுகவிற்குள் இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பும் என்று கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

TTV Dinakaran AIADMK

டிடிவி தினகரன் பாஜக கூட்டணி வெளியேற்றம்

டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், இனியும் காத்திருப்பது சரி அல்ல. சிலரின் துரோகத்தால் தான் கட்சி ஆரம்பித்தோம். துரோகம் செய்தவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் திருந்தவில்லை . அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்துவிட்டது.

இனியும் காத்திருப்பது சரி அல்ல, எங்களின் வழியில் செல்கிறோம். ஆணவம், அகங்காரம் பிடித்து சவுண்ட் பார்ட்டி போல் செயல்படுகிறார் (இபிஎஸ்). டிசம்பரில் யாருடன் கூட்டணி என்று சொல்கிறோம். திருந்துவார்கள் அல்லது திருத்துவார்கள் என எண்ணினோம், அதற்கு வாய்ப்பில்லை, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்

அமித் ஷாவின் பிளான் தோல்வி அடைந்துவிட்டது. என்டிஏ கூட்டணி தொடர்பாக அமித் ஷா போட்டிருந்த பிளான் தோல்வியில் முடிந்துவிட்டது, என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்து உள்ளார்.

செங்கோட்டையன் எடப்பாடி மோதல்

இப்படிப்பட்ட நிலையில்தான் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன் என்று செங்கோட்டையன் பேசி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது செப்.5-ல் எனது கருத்தை பிரதிபலிக்கப் போகிறேன்; கூட்டத்திற்கு யாரெல்லாம் வருவார்கள் என்பது எனக்கு தெரியாது; நேற்றுகூட யாரையும் நான் அழைக்கவில்லை, 500 பேர் அவர்களாகத்தான் வந்தார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

அதேபோல் நாளை மறுநாள் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தப் பின் முன்னாள் எம்.பி. சத்தியபாமா பேட்டி அளித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்ற அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இருமுறை சந்தித்தார். அப்போதே அவர் பாஜகவில் இணையவுள்ளார் என்ற பேச்சுக்கு வழிவகுத்தது. இடையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்றும் பேச்சுக்கள் வந்தன.

செங்கோட்டையன் அதிர்ச்சி

இந்த நிலையில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன். என்ன பேசப் போகிறேன் என்பதை அறியப் பொறுத்திருங்கள்" என்று கூறி உள்ளார். அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த பரபரப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார். பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜகவை சீண்டும் விதமாக பெரியார் புகைப்படத்தை செங்கோட்டையன் பயன்படுத்தி உள்ளதால், அவர் திமுக அல்லது தவெக பக்கம் செல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

செங்கோட்டையன் பேச்சுக்கு என்ன காரணம்?

அவரின் பின் பேச்சுக்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்ததில், அதிமுகவில் தான் ஓரம்கட்டப்படுகிறோம் என்று செங்கோட்டையன் நினைக்கிறார். கட்சியில் மூத்தவராக இருக்கும் நமக்கு மதிப்பு இல்லை என்று எடப்பாடி நினைக்கிறார். நிர்வாகிகளுடன் நடந்த மீட்டிங்கில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றுசேர்க்க போகிறேன் என்று செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது. சசிகலா, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக வெல்ல வேண்டும் என்றால் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

கொங்கு மண்டல வாக்குகளை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது. நாம் ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக முன்னர் போல வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்கு எல்லா தலைவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும், என்று செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன் என்று செங்கோட்டையன் பேசி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பின்த் பேச்சுக்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+