பெங்களூர் சர்ச் ஸ்ட்ரீட் எல்லாம் ஓரம் போலாம்! சென்னையில் மாறுது முக்கிய சாலை! நடக்கும் பெரிய மாற்றம்
சென்னை: கடந்த 30 ஆண்டுகளாக கைவிடப்பட்ட பெருங்குடி-வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷன் ரோடு முழுமையாக மாற்றப்பட உள்ளது.
அண்ணாநகர் போல இதை மாற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இங்கே உணவு கடைகள், பசுமையான இடங்கள், நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது. 24 மணி நேரம் கடைகள் இயங்கும் வகையில் இங்கே மாற்றங்களை செய்ய உள்ளனர்.

கடந்த மாதம் தெற்கு ரயில்வேயிடம் இருந்து சாலைப் பராமரிப்புப் பணிகளின் திட்டத்தை சென்னை மாநகராட்சி கையகப்படுத்தியது. சாலையை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகரை நியமித்துள்ளது. ஜிசிசி இந்த சாலையை 15 கோடி செலவில் முழு வீதியாக மாற்றும் முடிவை கையில் எடுத்துள்ளது.
இந்த சாலையை இரவு நேர கொண்டாட்டங்களுக்கானதாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தரமணி மற்றும் பெருங்குடிக்கான முக்கியமான இணைப்பாக இந்த 3-கி.மீ தூரம் அமைந்துள்ளது. MRTS நிலையங்களுக்கும் வேளச்சேரி 100 அடி சாலைக்கும் இடையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இரவு நேர ஃபுட் ஸ்ட்ரீட் தொடங்கி கொண்டாட்ட மையங்கள் வரை பல இங்கே அமைக்கப்பட உள்ளன. பெங்களூர் சர்ச் ஸ்ட்ரீட் போல இங்கே அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ள வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.
ஜனவரியில் தொடங்கும் பணிகள், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் முடிக்க உள்ளனர். இந்த இடத்தை பொதுமக்களுக்கான ஹேங்கவுட் இடமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு பணிகள் நடக்க உள்ளன.
வேளச்சேரியில் இருந்து OMR க்கு செல்லும் பல பயணிகளுக்கு போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை முக்கியமான ஒன்றாகும். CMRL கட்டுமானத்தால் ஏற்படும் போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக தொந்தரவு இல்லாமல் பெருங்குடியை அடைய இது ஒரு குறுக்குவழியாகும்.
ஆனால், சாலையின் பெரும்பகுதி பள்ளங்களால் நிறைந்து, மழை நாட்களில் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. மோசமான நிலை காரணமாக இந்த சாலை வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் வேளச்சேரி - பெருங்குடி இடையே இருவழிப் போக்குவரத்திற்கு பயணிகள் ஒரு வழிப்பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதை மனதில் வைத்து கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ள வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.
தற்போது அந்த சாலை உரிமை ரயில்வேயிடம் உள்ளது, ஆனால் சென்னை மாநகராட்சி பராமரிப்பு பணிகளை மட்டும் கையகப்படுத்தி, அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளும். இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது நிலுவையில் உள்ளது.
தற்போது, நிலப்பரப்பு ஆய்வு நடந்து வருகிறது, அடுத்த 15 நாட்களுக்குள் பணிகள் முடிவடையும். சேதமடைந்த மழைநீர் வடிகால்களும் மாநகராட்சி மூலம் புனரமைக்கப்படும். சிறந்த சாலை மேற்பரப்பு, நடைபாதை, பெஞ்சுகள், கூடுதல் தெரு விளக்குகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி அமைக்கும். ஜனவரியில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தொடங்கும் பணிகள் மார்ச்-மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் இது பொதுமக்களுக்கு திறக்கப்படும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications