சகுந்தலா தேவி யார்... என்னாது ஜெயலலிதாவா.. கிளம்பியது புது சர்ச்சை!
சகுந்தலாதேவி யார் என அடுத்த சர்ச்சை தொடங்கி விட்டது.
Recommended Video

சென்னை: அரசியல்வாதி கெட்-அப்பில் ஒரு பெண் கரடு முரடாக நடித்துவிட்டால் உடனே அது ஜெயலலிதா என்று முடிவு பண்ணி சர்ச்சையை கிளப்புவதே வேலையாகி விட்டது!!
கோமளவள்ளி என்பது ஜெயலலிதா பெயரே கிடையாது என்பது கூட தெரியாமல் அதிமுக அரசு கோபமடைந்துவிட்டது. கொதித்தெழுந்து சர்க்கார் பேனர்களை கொளுத்தினார்கள்.
அதிமுகவிலேயே ஊறி, வளர்ந்து அமைச்சராகவும், பொறுப்பாளர்களாகவும் இருப்பவர்களுக்கு கூட ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி இல்லை என்பது தெரியாதது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

மெதுவாக அடங்கியது
ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி இல்லை என்று டிடிவி வந்து சொன்னார், பிறகு தீபா வந்து சொன்னார்.. இப்படியே ஒவ்வொருவராகவும் வந்து சொல்லவும்தான் அந்த விஷயம் மெதுவாக அடங்கியது. ஆனால் சர்க்கார் படத்தை ஆர்ப்பாட்டம், கண்டனம், என்று சொல்லியே ஓட்ட வைத்துவிட்டார்கள்.

நடிகை மதுபாலா
இப்போதும் அதேபோல ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது. இதுவும் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படம்தான். அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிப்பது நடிகை மதுபாலா. வில்லத்தனமான பெண் அரசியல்வாதி கேரக்டர் என்று சொல்லப்படுகிறது.

பார்த்த மாதிரி இருக்கு
இது சம்பந்தமாக ஒரு போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. டெரர் முகத்தோடு மதுபாலா இருக்கிறார். மதுபாலா கதாபாத்திரத்தின் பெயர் சகுந்தலாதேவி என்பதாம். மதுபாலா ஒரு சேரில் உட்கார்ந்திருக்கிறார். அவரது டிரஸ், ஹேர் ஸ்டைல், எல்லாம் எங்கோ நமக்கு பார்த்த மாதிரியே இருக்கிறது.

ஒத்தை விரல்
முகத்தை படுவில்லத்தனமாக வைத்துக் கொண்டு, எதிரில் இருப்பவரை ஒத்தை விரல் காட்டி மிரட்டுகிறார். அவருக்கு பின்னால் 2, 3 பெண் உதவியாளர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். மதுபாலாவை பார்ப்பதற்கே மிடுக்காக இருக்கிறார்.

நெட்டிசன்கள்
இப்போது என்ன விவகாரம் என்றால், மதுபாலாவின் இந்த கதாபாத்திரம் ஜெயலலிதாவை குறி வைத்தா? அல்லது சசிகலாவை குறி வைத்தா என்பதுதான். இதை வைத்து கொண்டு நெட்டிசன்கள் சர்ச்சையில் இறங்கி விட்டார்கள்.

நல்ல விளம்பரம்
யாரையும் குறிப்பிட்டு இந்த படத்தை எடுக்கவில்லை என்பதை டைரக்டர் ஜேபிஆர் சொல்லி விட்டார். இது யாரை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் இப்போதே படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்க ஆரம்பித்து விட்டது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications