அடுத்த தாம்பரம் இதுதான்! சென்னையின் முக்கிய பகுதியாக மாறும் சிங்கப்பெருமாள் கோயில்.. அசுர வளர்ச்சி!
சென்னை: சென்னையின் மிக முக்கிய பகுதியாக சிங்கப்பெருமாள் கோயில் மாறி வருகிறது. அடுத்த தாம்பரம் என்று சொல்லும் அளவிற்கு இப்பகுதி அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. குடியிருப்புவாசிகளுக்கு ஏற்ற இடமாக சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிங்க பெருமாள் கோயிலில் இடம் வாங்குவது மிகவும் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது.
சென்னையில் தாம்பரம் வரையுள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது, அதற்கு மேல் ஒன்றும் இல்லை என சொல்லி வந்த காலம் தற்போது மாறி விட்டது. தாம்பரத்தை தாண்டிய பகுதிகளும், சென்னைக்கு நிகரான வளர்ச்சியை கண்டு வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் செங்கல்பட்டுக்கும் மறைமலைநகருக்கும் இடையே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயில் தான்.
ஐடி நிறுவனங்களை மையமாக கொண்ட ஓம்ஆர் - ஈசிஆர் பகுதியிலிருந்து வேறுபட்டு, பல்வேறு வசதிகளையும் கொண்ட குடியிருப்பு பகுதியாக உருவாகி வருகிறது சிங்கப்பெருமாள் கோயில். கச்சிதமாக திட்டமிட்டு, போக்குவரத்து கட்டமைப்பு செய்துள்ளதால், குடியிருப்புவாசிகளுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மின்சார ரயில் சேவை, மெட்ரோ மற்றும் விமான நிலைய இணைப்புகள் ஆகியவை தடையில்லாமல் கிடைக்கிறது.
சிறந்த முதலீடு: சென்னையின் முக்கிய மையாக உள்ள இந்த பகுதி நகரின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. ஜிஎஸ்டி ரோட்டில் சிங்கப்பெருமாள் கோயிலில் இடம் வாங்குவது தான் மிகவும் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. ஏனென்றால் முடியும் தருவாயில் உள்ள ரயில்வே ஓவர் பாசின் விளைவாக சிங்கப்பெருமாள் கோயிலில் ஜிஎஸ்டி சாலையில் இடது புறத்திற்கு இணையாக தற்போது வலது புறம் உள்ள பகுதிகளும் வேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன.
ரயில்வே ஓவர் பாஸ் பிரிட்ஜ் மட்டும் சிங்கப்பெருமாள் கோயிலின் சிறப்பு அம்சமாக இல்லை. அதற்கு இணையாக எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை வர இருக்கும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு சிங்கப்பெருமாள் கோவிலில் இணைகிறது. தாம்பரம் செங்கல்பட்டு உயர்நிலை சாலை வழித்தடம் ஒரு முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி சாலையை ஒரகடத்துடன் இணைக்கும் ஒரே பகுதி சிங்கப்பெருமாள் கோயில் மட்டுமே.
இவ்வாறு அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் ரயில்வே ஓவர் பாஸ் பிரிட்ஜ் இறங்கும் இடத்தில், சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்திலிருந்து ஒரு நிமிடத்தில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் பவிலியன்ல் வில்லா மனைகளை வாங்கினால் இரட்டிப்பு மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்கள் இங்கு மனை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஜி.எஸ்.டி சாலையை இணைக்கும் வழிகள்:
* சென்னையில் ரயில், சாலை, மெட்ரோ மற்றும் விமான நிலைய இணைப்பை வழங்கும் ஒரே சாலை ஜி.எஸ்.டி தான்.
* சிங்கப்பெருமாள் கோயிலை, பெங்களூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலைக்கான இணைப்பு இருக்கிறது. இதனால் சென்னை சென்ட்ரல் முதல் பூந்தமல்லி வரை சுமார் 30 கிமீ தூரத்துக்கு பெரும் வளர்ச்சி அடையும் சூழல் உருவாகியுள்ளது.
* சென்னை பைபாஸ் உடன் இணைப்பு இருப்பதால், நேரடியாக கொல்கத்தா நெடுஞ்சாலையை அடையலாம். இதனால் சென்ட்ரல் முதல் மாதவரம் வரை சுமார் 20 கிமீ தூரமுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும்.
* ஜிஎஸ்டி சாலையிலிருந்து வண்டலூர்- கேளம்பாக்கம் வழியாக ஓஎம்ஆர் - ஈசிஆர் பகுதிகளுக்கு ஐடி ஊழியர்கள் செல்ல கச்சிதமான இணைப்பு உள்ளது.
* கிளம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் சென்றடைய பயணிகளுக்கு வசதி அளிக்கிறது.
* சென்னை பெரிபெரல் ரிங் ரோடுக்கு இணைப்பு உள்ளதால், எண்ணூரில் இருந்து மகாபலிபுரம் வரையிலான வர்த்தக பாதையை இணைக்கிறது. இதனால் பயண நேரமும் குறைகிறது.
850க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்:
* சிங்கப்பெருமாள் கோயிலில் மஹிந்திரா, ரெனால்ட்- நிசான், ஃபோர்டு மற்றும் BMW உள்ளிட்ட முக்கிய ஆட்டோமொபைல் மற்றும் டயர் தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியில் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ZOHO, கேப்ஜெமினி, விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற ஐடி நிறுவனங்களும் உள்ளன.
* SRM மற்றும், பல்வேறு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. சிங்கப்பெருமாள் கோயிலுடன் அனைத்து முக்கிய இணைப்புச் சாலைகள் வழியாகவும் சுமார் 850 உற்பத்தித் தொழிற்சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம்:
* ஜிஎஸ்டி சாலையில் வலதுபுறம் ரயில்வே பாதை இருப்பதால் இடதுபுற பகுதி வளர்ச்சி கண்டு வந்தது. புறவழி பாலங்கள், மேம்பாலங்கள் கட்டப்பட்டதால் ஊரப்பாக்கம், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன.
* சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம், இப்போது ஜிஎஸ்டி சாலையின் இருபுறத்திலும் இணைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும் சூழல் உருவாகியிருக்கிறது.
* சென்னையின் முக்கிய வளர்ச்சிக்கு சிங்கப்பெருமாள் கோயில் முக்கிய பங்காற்றுகிறது. ஜிஎஸ்டி இணைப்பு இருப்பதால், பல்வேறு கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது.
இந்த மாபெரும் வளர்ச்சியால் பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் அடங்கியுள்ளது. இதனால் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. குடியிருப்புகளும் பெருகுவதால், புதிய தொழில் அமைக்க ஏற்ற இடமாகவும் மாறியுள்ளது. மேலும் விவரங்களுக்கு க்ளிக் https://gsquarepavillion.com செய்யவும்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!
















Click it and Unblock the Notifications