சந்திரயான்-3 வெற்றி.. அடுத்த குறி சூரியன்.. இன்னும் சில வாரங்களில்.. மயில்சாமி அண்ணாதுரை அப்டேட்!
சென்னை: சந்திரயான் - 3, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், அடுத்த டார்கெட் சூரியனை நோக்கித்தான், முக்கியமான செயற்கைக்கோள் இன்னும் சில வாரங்களில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரனை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் வடிவமைத்தனர். இது 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால் சந்திரயான் -3 விண்கலத்தில் லேண்டர், ரோவர் பாகங்கள் மட்டும் இடம்பெற்றன.

சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில் புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை எல்விஎம்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சந்திரயான்-3 புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது.
ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் சந்திரயான் நுழைந்தது. அதன்பின் நிலவின் சுற்றுப்பாதையில் வலம்வந்த விண்கலத்திற்கும் நிலவிற்குமான தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சந்திரயானின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் ஆகஸ்ட் 17-ம் தேதி பிரிக்கப்பட்டது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, அனைத்துகட்ட முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு சந்திரயான்-3 நேற்று மாலை நிலவில் தரையிறங்க தயாரானது. அதற்கான பணிகள் நேற்று மாலை 5.44 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தரையில் இருந்து 800 மீட்டர் உயரத்தை வந்தடைந்ததும், அதுவரை சாய்ந்தவாறு இருந்த விண்கலத்தின் கால்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக செங்குத்தாக கீழ்நோக்கி நேராக திருப்பப்பட்டது.
லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு கணினி, விண்கலத்தில் உள்ள கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து சரியான இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையை உறுதிசெய்தது. விண்கலத்தில் இருந்த இடர் உணர் ஆபத்து தவிர்ப்பு கேமரா உதவியால், தரையிறங்க வேண்டிய பகுதியை ஆராய்ந்து, அதில் பாதுகாப்பான ஒரு சமதள பரப்பு தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் 150 மீட்டரில் இருந்து 60 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் இறக்கப்பட்டது.
மிகவும் பரபரப்பான திக் திக் நிமிடங்களுக்கு மத்தியில் சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்துக்கு அருகே லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அடுத்த சில நிமிடங்களில், இஸ்ரோவுக்கு லேண்டர் குறுஞ்செய்தி அனுப்பியதும் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.
வெற்றிகரமாக சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கி, வேலையைத் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, "சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி, இந்திய அறிவியல் துறையில் ஒரு வரலாற்று நிகழ்வு. 2008-ல் சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் நமது முதல் நிலவுப் பயணம் தொடங்கியது. தென்துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதை அது உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, சந்திரயான்-2 திட்டத்தைச் செயல்படுத்தினோம். எனினும், இறுதிச் சுற்றில் பணியை நிறைவு செய்யமுடியவில்லை.
தற்போது சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர் விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாகச் சென்றடைந்து, திட்டமிட்டபடி தரையிறங்கியுள்ளது. எத்தகைய சிக்கலான சூழ்நிலையிலும் சிறப்பாகச் செயல்படும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்பது, இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-1 வெற்றி மற்றும் சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட சிறிய சறுக்கல்களில் பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த விண்கலத்தைச் செலுத்தி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளோம்.
அடுத்த உடனடி டார்கெட் என்றால் சூரியனை நோக்கிய ஆதித்யா. ஆதித்யா L1 செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு ஆய்வகமாக செயல்படும். சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1-ஐ ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications