கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு.. மேலும் 3 பேர் அதிரடியாக கைது.. என்ஐஏ தீவிர விசாரணை
சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கார் வெடித்தது. இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபின் என்ற நபர் நிகழ்விடத்திலேயே பலியானார். ஜமேஷா முபீன் வீட்டில் நடந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கிடைத்தது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்தது. பல்வேறு கோணங்களில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தினர். 14 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றி, தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த நவம்பர் மாதம் கோவை மாவட்டம் போத்தனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்த இப்ராஹீம் என்பவாது மகனான தாஹா நசீரை கைது செய்தனர். சௌரிபாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வரும் நசீரும் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனும் நண்பர்கள் என கூறப்படும் சூழலில் தாஹா நசீர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. அபூ ஹனிபா, சரண் மாரியப்பன் மற்றும் பவாஸ் ரகுமான் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இதன் மூலம் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்யும் வேலையில் மூன்று பேரும் ஈடுபட்டு வந்தது தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications