சென்னையில் பாரிமுனை, மண்ணடி உள்பட 3 இடங்களில்.. என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு.. பரபரப்பு
சென்னை: சென்னை பாரிமுனை, மண்ணடி, முத்தையால் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சில கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சினில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக இந்த மூன்று இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை முத்தையால் பேட்டை, பாரிமுனை மற்றும் மண்ணடி ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனையில் உள்ள ஈவினிங் பஜாரில் முகம்மது இலியாஸ், சையன் என்பவர்களுக்கு சொந்தமான கடைகளில் என்.ஐ.அதிஅதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முத்தியால்பேட்டை, மண்ணடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு என்.ஐ.ஏ அதிகாரிகள் சந்தேக இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சினில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக இந்த மூன்று இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கொச்சினில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் விரைவில் என்.ஐ.ஏ தரப்பில் இருந்து வெளியிடப்படும் என தெரிகிறது.
பாரிமுனையில் சயான் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்திய போது கணக்கில் வராத 300 கிராம் தங்கம், 37 லட்ச ரூபாய் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணடியில் உள்ள ஆப்பிள் பேலஸ், ஆரஞ்சு பேலஸ், கிரீன் பேலஸ் என்ற லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தும் இடம் பரபரப்பான இடம் என்பதால் போலீசாரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மண்ணடி உள்ளிட்ட பகுதியில் கூடுதல் பரபரப்பு தொற்றியுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த சோதனை இரவு வரை நீடிக்கக்கூடும் என்றும் அதன்பிறகே தேசிய புலனாய்வு அதிகாரிகள் இந்த சோதனை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications