தமிழகம் உட்பட 3 மாநிலங்களில்.. என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் செல்போன்கள், Pendrive உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன,
மாவோயிஸ்ட் அமைப்பே சேர்ந்த சிலர் அந்த அமைப்பு தொடங்கப்பட்ட தினத்தன்று கேரள மாநிலம் மலப்புரத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான துண்டுச் சீட்டுகளை வழங்கியதாகவும், பயிற்சி வகுப்புகளை நடத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் இந்திய பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த கேரளா-எடக்கரை மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் 20 இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மாவோயிஸ்ட் அமைப்பே சேர்ந்தவர்களின் இடங்களாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி என மொத்தம் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதேபோல கேரளாவில் 3 இடங்களிலும் கர்நாடகாவில் 5 இடங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.
இன்று நடந்த இந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ்கள், புத்தகங்கள், அறிக்கைகள், நோட்டீஸ்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications