Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய.. ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ வழக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது தேசிய புலனாய்வு முகமை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த மாதம் 25 ஆம் தேதி ஒருவர் பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அவரை போலீஸார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநர் மறுப்பதால் பெட்ரோல் குண்டை வீசியதாக கருக்கா வினோத் போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

NIA registers case against rowdy Karukka Vinod who threw petrol bomb near TN Raj Bhavan gate

இதைத்தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசர் சிறையில் அடைத்தனர். கடந்த 21 ஆம் தேதி புழல் சிறையில் ஜாமீனில் வெளியே வந்த கருக்கா வினோத், அதே நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.

எனவே கருக்கா வினோத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் என்ன தொடர்பு? பலமுறை சிறை சென்ற கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்தது யார், அவருக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குவது யார் போன்ற விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பாக விளக்கம் அளித்த புழல் சிறைத் துறை, சிறையில் இருந்த போது கருக்கா வினோத் இருந்த பிளாக் வேறு.

அது போல் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வழக்கில் கைதான நபர்களின் பிளாக் வேறு. சிறையில் வெவ்வேறு பிளாக்குகளை சேர்ந்த இரு தரப்பும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியது. நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பரிந்துரை செய்தார். அதன்படி, குண்டர் சட்டத்தில் கருக்கா வினோத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது. 3 பிரிவுகளின் கீழ் கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும் கூட்டு சதி, வெடிபொருட்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+