Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வரை வந்த நிகிதா மீதான புகார்.. வேலை வாங்கி தருவதாக 45 லட்சத்தை சுருட்டியதாக குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை திருப்புவனம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது மேலும் ஒருவர் சென்னையில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். நிகிதா வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 48 லட்சம் மோசடி செய்ததாக சென்னை எழும்பூரை சேர்ந்தவர் புகார் கூறியுள்ளார். ஏற்கனவே மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக நிகிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் குமார் என்ற இளைஞர், விருதுநகரை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் நகை காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இதில் போலீசாரின் விசாரணையின் போது அஜித் குமார் உயிரிழந்துள்ளார். அதாவது தனிப்படை போலீசார் அஜித் குமாரை அழைத்து சென்று கோவில் வளாகத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதாக வீடியோ வெளியானது.

nikitha-involved-in-the-thiruppuvanam-ajithkumar-case-faces-fraud-charges-in-chennai-too

அடுத்த வாரத்துக்குள் சிபிஐ விசாரணை

போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக குடும்பத்தினரும் புகார் கூறினர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், காவல்துறை மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அஜித் குமார் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருப்பதும், அடித்து சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள், நீதிபதி ஜான் சுந்தர்லால் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இதன்படி நீதிபதி விசாரணை நடத்தி நேற்று விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அடுத்த வாரத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்ததனர்.

சென்னையை சேர்ந்தவர் புகார்

இதற்கிடையே இந்த வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமாறன் என்பவரும் நிகிதா தன்னிடம் பண மோசடி செய்ததாக தற்போது புகார் தெரிவிரித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை எழும்பூரை சேர்ந்த ஒருவரும் நிகிதா மீது ரூ. 45 லட்சம் பண மோசடி புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எழும்பூர் சேட் காலனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் எழும்பூர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது நண்பர் ஒருவரின் மூலமாக மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கவியரசு, அவரது மனைவி சிவகாமி, சகோதரி நிகிதா ஆகிய 3 பேர் அறிமுகம் ஆகினர். அப்போது அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர். கடந்த 2011 ஆம் ஆண்டு 3 பேரும் சேர்ந்துதலைமை செயலகத்தில் எனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர்.

45 லட்சம் கொடுத்தேன்

இதனை உண்மை என நம்பி நானும் எனது ரூ. 45 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் எனக்கு வேலை வாங்கி தரவில்லை. என்னை மோசடி செய்து ஏமாற்றி விட்டார்கள். இப்போது அஜித் குமார் வழக்கு பற்றி தெரிந்ததும் அவர்கள் மோசடி செய்திருந்தது எனக்கு தெரிய வந்தது. எனவே நிகிதா உள்ளிட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+