கவுதமி வீட்டுக்குள் ராத்திரியில் திடீரென சுவர் ஏறி குதித்த இளைஞர்.. 2 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கவுதமியின் வீட்டுக்குள் குடிபோதையில் சுவர் ஏறி குதித்து நுழைந்த இளைஞரை நீலாங்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கவுதமி (55 வயது).

Nilangarai police have arrested a youth who jumped into a wall inside actress Gautamis house

தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்.

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நடிகை கவுதமியின் வீடு அமைந்துள்ளது. நேற்றிரவு திடீரென சுவர் ஏறி குதித்து இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார்.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து இளைஞரை விரட்டி பிடித்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

முதல்கட்ட விசாரணையில், இந்த இளைஞரின் பெயர் பாண்டியன் என்பதும், பெயிண்டராக வேலை பார்ப்பதும் குடிபோதையில் சுவர் ஏறிக் குதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+