தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்கள் எந்த மாவட்டம்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Nilgiris, Coimbatore and 2 more districts gets heavy rainfall

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். நாளை வடகடலோர தமிழகம், புதுவை, காரைக்கால், சென்னை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, தருமபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் நாளை முதல் வரும் 26-ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக் கடல், கேரள கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+