நீலகிரி டீ கடைக்குள் புகுந்த மர்ம விலங்கு.. பூனை என நினைத்து உற்று பார்த்தால் ட்விஸ்ட்.. செம சம்பவம்
சென்னை: நீலகிரியில் டீ கடை ஒன்றில் புகுந்த விலங்கு ஒன்றை அங்கு இருந்து மக்கள் பூனை என நினைத்து தூக்கி கொஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் டீ கடைக்கு நேற்று மாலை பூனை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு ஒன்று வந்துள்ளது.
உடலில் கொஞ்சம் சிவப்பான கோடுகளோடு திடகாத்திரமான உடல் அமைப்போடு இருந்துள்ளது. டீ கடைக்காரரும் பால் குடிக்க பூனை வந்துள்ளதாக கருதி உள்ளார்.

பூனை
பூனை என்று கருதி சிறிய பாத்திரத்தில் அந்த விலங்கிற்கு பால் வைத்துள்ளார். ஆனால் அது பாலை குடிக்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த மக்கள் அதை பூனை என்று கருதி சிலர் விலங்கோடு விளையாட முயன்று உள்ளனர். இன்னும் சிலர் அதை தூக்கி கொஞ்சவும் முயன்று அதை பிடித்து இழுத்துள்ளனர்.

கோபம்
அப்போது கோபம் கொண்ட அந்த விலங்கு மக்களை கடிக்க பாய்ந்துள்ளது. ஒருவரின் கையில் லேசாக கடித்தும் வைத்துள்ளது. அப்போதுதான் அதன் பல்லை அங்கிருந்த மக்கள் பார்த்துள்ளனர். உற்று பார்த்த பின்தான் வந்தது பூனை அல்ல சிறுத்தை என்று தெரிந்துள்ளது.

சிறுத்தை
ஆம் அது மிக மிக சின்ன சிறுத்தை குட்டி என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து வேகமாக அங்கிருந்து மக்கள் தூரம் சென்றனர். அதோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பூனை குட்டின்னு நினைச்சு சிறுத்தை குட்டிக்கா பால் வைத்தோம் என்று டீ கடைக்காரர் திகைப்பில் நின்ற நேரத்தில் அங்கு வனத்துறை விரைந்து வந்தது.

வனத்துறை
உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் அந்த சிறுத்தை குட்டியை காப்பாற்றி அங்கிருந்து தூக்கி சென்றனர். அருகில் காட்டில் இருந்து அந்த சிறுத்தை குட்டி வந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications