காட்டோரம்.. ரோட்டோரம்.. கருப்பசாமியுடன் காரில்.. நிர்மலாதேவி சொன்ன பரபர தகவல்!
Recommended Video

சென்னை: கருப்பசாமியுடன் காரில் உல்லாசம் அனுபவித்ததாக நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலா தேவி, மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாணவிகளை நிர்பந்தித்தார்.
இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் அவர் அளித்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
[10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்]

தொடர்பு
நிர்மலா தேவி தான் அளித்த வாக்குமூலத்தில் யார் யாருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்க பயிற்சியில் சேருவது தொடர்பாக முருகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

விஷயம்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.
[உன் மகளும் வருவாரா?... நிர்மலாதேவியையே அதிர வைத்த முருகனின் கேள்வி!]

கேண்டீனுக்கு சென்றேன்
அதன்பிறகு, மார்ச் 7-ஆம் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ஆம் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை
அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

உதவிக்கு அழையுங்கள்
அப்போது முருகன் என்னிடம், "என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?" என்று மீண்டும் கேட்டார். "நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்து வைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

பெயர் தெரியாது
மார்ச் 12-ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

கருப்பசாமியுடன் காரில் உல்லாசம்
அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications