Nirmala Sitharaman: ஊறுகாய் மாமி என்றார்கள்.. கிண்டல் பண்ணாங்க.. ஆனால் நல்லது பண்ணினால்.. ஓபனாக பேசிய நிர்மலா சீதாராமன்
சென்னை: சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), ஜிஎஸ்டியில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன்னால், "மோடி ஏன் இப்படி செய்கிறார்? நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார்? அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜிஎஸ்டியை நடத்த தெரியாது" என்று விமர்சனம் செய்தார்கள் என்றார்.
அதேவேளையில், மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்பதையும் எடுத்து சொன்னேன். "அந்த நல்லதுக்கு, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம்" என்று யாரும் சொல்லவில்லை என்று கூறினார்.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்
கடந்த 2017 ஆம் ஆண்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. பல்வேறு மறைமுக வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு அடுக்குகள் இருந்ததால் அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீடித்த நிலையில், 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டியை 2 அடுக்குகளாக குறைத்தது.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் காரணமாக மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் வரிகள் குறையும். வரும் 22ஆம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வர உள்ள நிலையில், சென்னையில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் குறித்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஊறுகாய்தான் போடதான் தெரியும் என்றார்கள்
"ஜிஎஸ்டியில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன்னால், மோடி ஏன் இப்படி செய்கிறார்? நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார்? அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜிஎஸ்டியை நடத்த தெரியாது" என்று விமர்சனம் செய்தார்கள். இதையெல்லாம் நாங்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தோம்.
அப்படி பேசாதீர்கள் என்று சொல்லவில்லை
அப்படி பேசாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர்மறையாக பேசவில்லை. ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்திருக்கிறது. மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்பதையும் எடுத்து சொன்னேன். "அந்த நல்லதுக்கு, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம்" என்று யாரும் சொல்லவில்லை. சொல்லாமல் போனால் கூட எனக்கு பரவாயில்லை.
நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? மாநிலங்களில் இருந்து வரும் நிதித்துறை அமைச்சர்கள் அமர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கிறார்கள். இத்தனை நாளாக செய்த நல்லதில் அவர்களும்தான் இருந்தார்கள். இன்றைக்கு செய்கிற நல்லதிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள்.
ஜீரோவுக்கு போய்விட்டது
சாலையோர கடைகளில் விற்கப்படும் பாப்கானுக்கு வரி கிடையாது. அதில் உப்பு, சாக்லெட் போட்டு நிறுவனங்களில் விற்றார்கள். எனவே அதற்கு 5 சதவீதமும், 18 சதவீதமும் ஜிஎஸ்டி வகைப்படுத்தப்பட்டது. இதைக் கூட கிண்டல் செய்தனர். "பாப்கானுக்கு 2 விலையா?" என்றனர். இன்றைக்கு எல்லா உணவுப்பொருட்களும் 5 சதவீதத்திற்கு வந்துவிட்டது, ஜீரோவுக்கு போய்விட்டது. வகைப்பாடு பிரச்சனை இப்போது இல்லை.
தீபாவளிக்கு முன்பே செய்ய வேண்டும்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தை தீபாவளிக்கு முன்பே செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால், தற்போது அது நவராத்திரிக்கு முன்னாடியே அமல்படுத்தப்படுகிறது. காரணம், நவராத்திரிக்கும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவார்கள் என்பதால் முன்கூட்டியே இந்த வரி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்" இவ்வாறு அவர் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications