தமிழக பாஜக பொறுப்பாளராக நிர்மலா சீதாராமன் நியமனம்? அண்ணாமலைக்கு கடும் அதிர்ச்சி
சென்னை: தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளரான அண்ணாமலையின் மிக நெருங்கிய நண்பரான பிஎல் சந்தோஷ் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாடு பாஜகவின் புதிய மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட இருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா திமுகவை பாஜக கூட்டணியில் இருந்து விரட்டியதால் இப்போது 'குற்றவாளி' கூண்டில் நிறுத்தப்பட்டது போல நிற்கவைக்கப்பட்டுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இது தொடர்பான விசாரணைக்காக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார் அண்ணாமலை.

ஆனால் டெல்லி சென்ற அண்ணாமலையை பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒருவர் கூட சந்திக்க முடியாது என சொல்லிவிட்டனராம். இதனால் டெல்லியின் கோபத்தை எப்படி தணிப்பது என தமது சக நண்பரான கர்நாடகா எம்பியின் வீட்டில் அமர்ந்து ஆலோசனை நடத்தினாராம் அண்ணாமலை.
அப்போதுதான் உடனடியாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை போய் பாருங்கள் என பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டதாம். இதுவரை தமிழ்நாடு பாஜக விவகாரங்களை கவனித்து வந்தவர் பிஎல் சந்தோஷ். அவருடன் மிக மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணாமலைக்கு சிக்கல் வராமல் இருந்தது.
தற்போது திடீரென நிர்மலா சீதாராமனை சந்திக்க வேண்டும் என மேலிடம் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்தாராம் அண்ணாமலை. இதனையடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார் அண்ணாமலை.

தற்போது தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவரும் தமிழ்நாட்டு உண்மை நிலவரங்களை தெரியப்படுத்தாமல் மறைத்தவருமான பிஎல் சந்தோஷ் நீக்கப்படுவார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
பிஎல் சந்தோஷ் நீக்கப்படும் நிலையில் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இனி தமிழ்நாடு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராக செயல்படுவார்; அறிவிக்கப்படுவார் என்கின்றன டெல்லி செய்தியாளர்கள் வட்டாரங்கள்.

இதுநாள் வரை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்தபடி கேம் ஆடிக் கொண்டிருந்த அண்ணாமலை மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை பெரும் கிலியை தரக் கூடும் என்கின்றன அக்கட்சியின் உள்வட்டாரங்கள்.
அதேநேரத்தில் அண்ணாமலையை கடுமையாக எதிர்த்து வந்தவர்கள் இப்போது நடந்து வரும் மாற்றங்களைக் கண்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றம் ஒன்றுதான் மாறாதது!
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications