ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங்! நீடா அம்பானி அணிந்திருந்த புடவையை பார்த்தீர்களா.. என்ன ஸ்பெஷல்?
சென்னை: முகேஷ் அம்பானியின் எல்லாமுமான நீடா அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்திருந்தார்.
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் என்கோர் நிறுவனத்தின் உரிமையாளர் விரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்டிற்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. அதற்கு முன்பு ப்ரீ வெட்டிங் எனப்படும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச் 1, 2, 3 ஆகிய 3 நாட்கள் நடந்தது.
கடந்த 1 ஆம் தேதி முதல் நாள் அன்று நூற்றுக்கணக்கான உணவு வகைகள், உச்சநட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. முதல் நாள் கொண்டாட்டத்தின் போது முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் பாடல் ஒன்றுக்கு நடனமாடினர். இவர்களது உடைகள் வெகுவாக கவர்ந்தன.

நேற்றைய தினம் நடந்த கொண்டாட்டத்தின் போது சர்வதேச புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹானாவின் கலை நிகழ்ச்சிகள் நல்லதொரு வரவேற்பை பெற்றன. அவருடன் ஷாரூக்கான், ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சி விழாவில் நீடா அம்பானி ஒரு பட்டு புடவை அணிந்திருந்தார். அந்த புடவை காஞ்சிபுரம் நெசவாளர் நெய்தது. வெள்ளி ஜரிகை பதித்த அந்த புடவையில் அழகாக இருந்தார் நீடா. அந்த புடவைக்கு ஜர்தோஷி வேலைப்பாடுகளை செய்தவர் மணீஷ் மல்ஹோத்ரா.

நீடா அம்பானிக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்திய நெசவாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் நீடா அந்த புடவையை அணிந்திருந்தார். 6 கஜங்களை கொண்ட புடவையின் விலை என்ன என தெரியவில்லை. ஆனால் லட்சக்கணக்கில் இருக்கும் என தெரிகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் எம்பி பரிமல் நத்வானியின் மகன் திருமணத்தில் கின்னஸ் உலக புத்தகத்தில் மிகவும் விலையுயர்ந்த புடவையை நீடா அம்பானி அணிந்திருந்தார். அதன் விலை ரூ 40 லட்சம். இதை வடிவமைத்தவர் சென்னை சில்க்ஸ் இயக்குநர் சிவலிங்கம். இதை 35 கலைஞர்களை கொண்டு தயாரித்துள்ளார். அந்த புடவையின் எடை 8 கிலோ ஆகும். The Vivah Pattu Saree என்ற பெயர் அந்த புடவைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications