கைலாசாவில் இவங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பேன் – ஹோட்டல் அதிபருக்கு நித்யானந்தா பதில் !!
கைலாசா நாட்டின் தர்மசாஸ்திரம் எழுத ஆலோசனை சொல்பவர்களுக்கு கைலாசா ரத்னா விருதும் 100 பொற்காசுகளும் பரிசாக வழங்கப்படும் என்று நித்யானந்தா கூறியுள்ளார்.
சென்னை: கைலாசா நாடு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மதுரை ஹோட்டல் உரிமையாளருக்கும், திருச்சி ஜவுளிக்கடை உரிமையாளருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார் நித்யானந்தா. அதே போல கைலாசா தர்மசாஸ்திரம் எழுத நல்ல ஆலோசனைகள் சொல்பவர்களுக்கு கைலாசா ரத்னா விருதும் 100 கைலாசா பொற்காசுகளும் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் நித்யானந்தா.
Recommended Video
இந்தியாவில் இருந்து தலைமறைவானதாக கூறப்படும் நித்யானந்தா இப்போது கைலாசா என்ற நாட்டிற்கு ராஜாவாக இருக்கிறார். தினசரியும் ஒரு வீடியோ என்று யுட்யூப் மூலம் அப்லோடு செய்கிறார். விநாயகர் சதுர்த்தி நாளில் கைலாசா நாட்டின் நாணயங்களையும் அறிமுகம் செய்தார்.
கால் காசு முதல் பத்து காசு வரை அறிமுகம் செய்துள்ள நித்யானந்தா 2 கிராம் தங்கம், 5 கிராம் தங்கம் தொடங்கி 116.638038 கிராம் எடை கொண்ட தங்கம் வரை காசுகளை அறிமுகப்படுத்தியுள்ளார். ஏன் கைலாசா நாடு ஆரம்பித்தேன். என்னென்ன சிறப்பம்சம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டேன்
எனக்கு தெரிந்ததெல்லாம் மீனாட்சிதான் அம்மா மீனாட்சி மதுரை மீனட்சிதான். அவள் கொடுத்த அருளும் தீர்வும்தான் இந்த கைலாசம்.
என்னிடம் இருந்து என்னிட அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. நான் இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டேன் வேறு வழியில்லாமல்
நான் இந்த கைலாயத்தை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஜனவரிக்குள் பாராளுமன்ற அமைப்பு
இந்து பாராளுமன்றத்தை நிறுவி இந்து மதத்தின் நிர்வாகங்களையும் மதம் சார்ந்த நிர்வாகங்கள் நிர்ணயங்கள் கருத்துக்களை தொகுத்து உலகத்திற்கான மாதிரி அரசை உருவாக்குவோம். அடுத்த ஆறு மாதங்கள் அந்த வேலைகள் நடைபெறும். ஜனவரிக்குள் முடித்து விட வேண்டும். சிவ ராத்திரிக்கும் முழு வரையும் மாதிரியும் வெளியிடப்படும்.

100 பொற்காசுகள் பரிசு
பரமசிவன் பேரருளால் இந்த திட்டத்திலும் வெற்றியடைவோம். இப்போது பார்வையாளர்களாக இருப்பவர்கள் பொருளாதார கொள்கை சார்ந்தோ, பாராளுமன்றம் சார்பாக கருத்துக்களை கூறுங்கள் வரவேற்கிறோம். உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்களின் பெயரை குறிப்பிட்டு எங்களின் தர்ம சாஸ்திரத்தின் பாகமாக மாற்றிக்கொள்கிறோம். உங்கள் ஆலோசனைகளை [email protected] என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம். நல்ல ஆலோசனைகள் சொல்பவர்களுக்கு கைலாசா ரத்ன விருதும் 100 பொற்காசுகளும் பரிசளிக்கப்படும்.

கைலாசா எங்கே இருக்கிறது
கைலாசம், இ பாஸ்போர்ட், இ சிட்டிசன்ஷிப் அனைவருக்கும் வழங்குகின்றோம். இ சிட்டிசன் ஷிப் வேண்டுமென்று நினைத்தாலும் அப்ளை பண்ணலாம். கைலாசத்தை உருவாக்கும் முயற்சியில் அனைவருக்கும் நன்றி என்று சொன்ன நித்யானந்தா, கைலாசம் எங்கே இருக்கிறது என்று கூடிய விரைவில் சொல்வேன் என்றும் சொல்லியிருந்தார்.

கைலாசாவில் யாருக்கு முன்னுரிமை
இந்தநிலையில்தான் கைலாசாவில் ஹோட்டல் வைக்க இடம் கேட்டு லெட்டர் போட்டிருந்தார் மதுரை ஹோட்டல் அதிபர். அதற்கு பதில் சொல்லியிருக்கும் நித்யானந்தா. மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மதுரை ஓட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சி ஜவுளிக்கடை அதிபர் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். மேலும், தனது சொத்துக்களை மதுரை, திருவண்ணாமலைக்காக எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications