நிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..!
சென்னை: நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் காலை நிலவரப்படி 3 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் குடிசை வீடுகள் உட்பட 101 வீடுகள் இடிந்து சேதமான விவரம் தெரியவந்துள்ளது. இந்தச் சேத மதிப்பு மேலும் உயரக்கூடும் எனத் தெரிகிறது.

நேற்று மாலை முதல் இன்று காலை வரை தமிழகம் முழுவதும் 380 மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் அவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இதேபோல் விளைபயிர்கள் குறித்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

நிவர் புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய முழு விவரம் இன்னும் அரசுத்தரப்பில் வெளியிடப்படவில்லை. மேற்கண்ட தகவல்கள் அனைத்து காலை நிலவரப்படி தெரிவிக்கப்பட்ட விவரம்.
தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை விட நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேவேளையில் புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த நிவர் புயல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications