புயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா!
சென்னை: சென்னைக்கு அருகே நிவர் புயல் கரையை கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் சென்னையில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கிவிட்டது.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிவர் புயல் மரக்காணம் அருகே கரையை கடந்தது. புதுச்சேரி - மரக்காணம் பகுதிக்கு இடையில் நிவர் புயல் கரையை கடந்தது.
இந்த புயல் கரையை கடக்கும் போது 143 கிமீ வேகத்தில் காற்று வீசியது. அதி தீவிர புயலாக நிவர் கடந்த நிலையில் வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.

சென்னை
சென்னையில் இந்த புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் இருக்கும் ஏரிகள் எல்லாம் மொத்தமாக நிரம்பியது. அதேபோல் சென்னையில் இருக்கும் பல்வேறு சாலைகளில் தண்ணீர் நிரம்பி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது.

எப்படி
இந்த நிலையில் சென்னையில் வெள்ளம் ஏற்படாத பிற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கிவிட்டது. ஆம் சென்னையில் தற்போது விமான போக்குவரத்து தொடங்கிவிட்டது. காலை 7 மணியில் இருந்தே விமானம் இயங்க தொடங்கிவிட்டது. இன்னொரு பக்கம் சாலைகளில் வாகனங்கள் செல்ல தொடங்கிவிட்டது.

புயல்
புயல் மொத்தமாக கரையை கடந்துவிட்டதால் சாலையில் வாகனங்கள் தென்பட தொடங்கி உள்ளது. சென்னையில் தற்போது அரசு பேருந்துகளும் இயங்க தொடங்கி உள்ளது. சென்னையில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கூடுதல்
சென்னையில் சாலைகளின் நிலையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மக்களும் வெளியே வர தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் வெள்ளம் இல்லை என்ற நிம்மதியில் மக்கள் உள்ளனர்.

மரங்கள்
அதேபோல் சென்னையில் கீழே மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக நவீன எந்திரங்கள் களமிறக்கப்பட்டள்ளது. புயல் கரையை கடந்து 4 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சென்னை இயல்பு வாழ்க்கைக்காக வேகமாக தயாராகி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications