கார் ரேஸ் விட்டது போதும்.. கல்யாணத்துக்கு ரெடியான நிவேதா பெத்துராஜ்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ் நடிப்பு மட்டுமின்றி பேட்மிட்டன், ஃபார்முலா 1 கார்பந்தயம் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர். இடையில் பிரபல அரசியல்வாதி உடன் காதல் என சில சர்ச்சையில் சிக்கியவர், தற்போது திருமண வாழ்வுக்கு தயாராகி வருகிறார். தொழிலதிபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருக்கும் நிலையில், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த நிவேதா பெத்துராஜ் நெல்சன் இயக்கத்தில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான புதிதிலேயே அவருக்கு அடுத்தடுத்து தமிழ் திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்தன.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனி உடன் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், பிரபுதேவா உடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நிவேதா பெத்துராஜ்
தமிழ் மட்டுமல்லாத தெலுங்கு திரையுலகிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனன் நடித்த அலா வைகுண்டபுறமுள்ளே படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. கடைசியாக அவர் நடித்த பருகூ எனும் வெப் சீரிஸ் போட்டியில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்து நிலையில் பெரிய அளவில் அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனையடுத்து ஒரு சில வெப் சீரிஸ்களில் நிவேதா பெத்துராஜ் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது
அரசியல்வாதி
சினிமா மட்டுமல்லாது பேட்மிட்டனிலும் ஆர்வம் கொண்டவர். அது மட்டுமல்லாது ஃபார்முலா 1ன் கார்பந்தயத்திலும் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். இடையில் பிரபல அரசியல்வாதி ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அந்த அரசியல்வாதி அவருக்கு 50 கோடி ரூபாயில் துபாயில் பங்களா வாங்கி கொடுத்ததாகவும் வதந்தி கிளம்பியது. ஆனால் தன்னை பற்றி கிளம்பிய வதந்திகளுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருந்தார் நிவேதா பெத்துராஜ்.
நிவேதா காதல்
இந்த நிலையில் அரசியல்வாதி உடனான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தனது திருமணம் குறித்தும் மறைமுகமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நிவேதா பெத்துராஜ். அவருடன் இருப்பவர் ரஜித் இப்ரான். இவர் மாடலிங் துறையில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிரபல தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது. இருவருக்கும் ஏற்கனவே திருமண நிச்சயம் நடைபெற்றதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஹார்ட்டின் எமோஜியுடன் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிவேதா பெத்துராஜ் வேறு எதையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் வாழ்த்து
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் உண்மையில் திருமணம் குறித்த அறிவிப்பா இல்லை, பரபரபுக்காக சினிமா சூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ளாரா என்ற கேள்விகளையும் சில சினிமா ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். எது எப்படியே சினிமாவாக இருந்தாலும், திருமண வாழ்வாக இருந்தாலும் நிவேதா பெத்துராஜுக்கு வாழ்த்துகள் என லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications