நம்பர் 1 அரிசி ரேஷன் கடைகளில்.. சேலத்தில் தெறிக்க விட்ட எடப்பாடி பழனிசாமி.. கவனித்த முக்கிய கட்சிகள்
சேலம்: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து அரசியல் கட்சிகளிடையே கடும் விவாதங்களும், வாக்குறுதிகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆளுங்கட்சியான தி.மு.க. பல்வேறு மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவும் தற்போது ரேஷன் அரிசியின் தரம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை பற்றி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு என்ன தெரியுமா?
தமிழகத்தில் தற்போது சுமார் 2.19 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குக் கூட்டுறவுத் துறை மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்க 'தாயுமானவர்' திட்டம் மூலம் வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்துப் பொதுமக்களிடையே அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ரேஷன் பொருட்கள் வீடு தேடி
இப்படிப்பட்ட சூழலில், ரேஷன் விநியோகத்தை பொறுத்தவரை மற்ற கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. தவெக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பொருட்களையும் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்குவோம் என்று கூறியுள்ளது.
நாம் தமிழர் கட்சி ரேஷன் கடைகளில் தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. இவற்றுக்கெல்லாம் போட்டியாக, மக்களின் அடிப்படைத் தேவையான அரிசியின் தரத்தை உயர்த்துவோம் என்ற அ.தி.மு.க-வின் இந்த அறிவிப்பு சாமானிய மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
சேலம் எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ரேஷன் பொருட்கள் குறித்துப் புதிய உறுதிமொழியை அளித்துள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றால், ரேஷன் கடைகளில் இப்போது வழங்கப்படுவதைக் காட்டிலும் மிக உயர்தரமான, அதாவது நம்பர் 1 தரத்திலான அரிசி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். ஏழை எளிய மக்கள் தரமான உணவைப் பெறுவதை உறுதி செய்வதே தங்கள் நோக்கம் என்றும் எடப்படி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி சில நேரங்களில் தரம் குறைவாக இருப்பதாகவும், கல் மற்றும் தூசி கலந்திருப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இதனை முழுமையாகக் களைந்து, வெளிச்சந்தையில் விற்கப்படும் தரத்திற்கு இணையான அரிசியை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம் என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சேலம் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அரிசி கடத்தலைத் தடுக்கவும், எடைக் குறைவு போன்ற முறைகேடுகளை ஒழிக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக விஜய், நாம் தமிழர் கட்சி
மக்களின் அன்றாட உணவுத் தேவையுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த ரேஷன் விவகாரம், வரும் தேர்தலில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைய அரசின் திட்டங்களுக்கு மாற்றாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள இந்த வாக்குறுதி, ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. தரமான உணவு தானியங்கள் விநியோகம் என்பது வெறும் வாக்குறுதியாகத் தாண்டி, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது...
அதனால்தான் எடப்பாடி பழனிசாமி இன்று ரேஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இது பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது..














Click it and Unblock the Notifications