பாஜக உடன் கூட்டணி இல்லைனு விஜய் சொல்லலயா? தமிழிசைக்கு தவெக தரப்பில் இருந்து சுளீர் பதில்!
சென்னை: பாஜக உடன் கூட்டணி இல்லை என தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருந்த நிலையில், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விஜய் சொல்லவில்லை எனக் கூறி இருந்தார். அதற்கு சிடிஆர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை என அக்கட்சியின் தலைவர் கூறவில்லை என்று கூறிய கருத்துக்கு சிடிஆர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.

களத்தில் தவெக
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தற்போதே தமிழ்நாட்டில் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. ஒருபக்கம் திமுக தலைமையிலான கூட்டணியில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த அதே கூட்டணி தொடர்ந்து வருகிறது. இன்னொருபுறம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையக்கூடுமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியை வீழ்த்த விஜய், பாஜக - அதிமுக கூட்டணியில் இணைவார் என தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
சிடிஆர் நிர்மல் குமார் சொன்ன வார்த்தை
இந்நிலையில் அண்மையில் தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தமிழக வெற்றிக் கழகம் பாஜக உடன் கூட்டணி வைக்காது, அது 100% உறுதி என பேசியிருந்தார். அதற்கு பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்த கருத்து பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
தமிழிசை ரியாக்ஷன்
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறவில்லை. யாரோ ஒருவர் சொல்வதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக பார்க்க முடியாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார். பாஜக கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் சொல்லட்டும் அதன் பின்பு பேசுகிறோம் என்றும் தமிழிசை பேசியிருந்தார்.
சிடிஆர் மீண்டும் பதிலடி
இந்நிலையில் தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமாரிடம் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "மற்ற கட்சிகளை போல் இல்லாமல் எங்கள் கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் தலைவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பேசுகிறோம்.
கூட்டணி விவகாரத்தில் விஜய் நிலைப்பாடு இதுதான்
முன்னர் சொன்னதுபோல் கொள்கை எதிரி பாஜக உடனும், மாநிலத்தில் அரசியல் எதிரி திமுகவுடனும் கூட்டணி இல்லை என்பது உறுதி. பாஜகவுடனும், திமுகவுடனும் தவெக கூட்டணி கிடையாது என்று தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தலைவர் விஜய் ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார். கூட்டணி குறித்து விஜய் தெரிவித்த நிலைப்பாட்டையே நாங்களும் தெரிவிக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதனை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் பாஜகவையும், திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது நிர்மல் குமார் கூட்டணி பற்றி விஜய்யின் முடிவைத்தான் தாங்கள் வெளியில் சொல்வதாக தெரிவித்துள்ளார்.
-
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications