முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில், சென்னை மாநகராட்சி கூட்டம் இன்னும் கூட்டப்படாமல் இருக்கிறது. அதேபோல இதுவரை மேயர் பிரியா முதலமைச்சர் விஜய்யை சந்திக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, முதலமைச்சரை சந்திக்கப்போவதில்லை என்று பிரியா கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ வெற்றிக் கழகம் பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதற்கு முன்னர் வரை திமுக உடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தவெக உடன் கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன. அதிலும் விசிக, ஐயுஎம்எல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அதிகாரித்தில் பங்கெடுத்திருப்பது, திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒருபுறம் எனில், மறுபுறம் உள்ளாட்சி பணிகள் பெரிய அளவில் நடக்கமாமல் அப்படியே தேங்கி இருக்கின்றன. மாமன்ற கூட்டம் கூட்டினால்தான் வேலைகள் நடக்கும். ஆனால், உள்ளாட்சியில் கணிசமான அளவில் திமுக கவுன்சிலர்கள் இருக்கின்றனர். சென்னையிலும் இதே நிலைமைதான். இப்படி இருக்கையில், சென்னை மாநகராட்சி கூட்டம் எப்போது கூட்டப்படும் என்கிற கேள்வி எழுந்திருந்தது.
ஒவ்வொரு மாதமும், மாதத்தின் இறுதி வாரத்தில் மாநகராட்சி கூட்டம் நடைபெறும். தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் கூட்டம் நடக்கவில்லை. அதுபோல, மே மாதம் கூட்டம் நடத்தப்பட வேண்டிய தேதியும் கடந்துவிட்டது. இப்படி இருக்கையில், இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள அலுவலகங்களுக்கு வந்திருந்தார். இந்நிலையில் அவரிடம் மாநகராட்சி கூட்டம் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்திருந்தது. அதற்கு பதிலளித்த அவர்,
"தற்போது புதிய அரசு பொறுப்பேற்று செயலாற்றி வருகிறது. மே மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. தமிழக முதல்வரை இப்போதைக்கு சந்திக்கும் வாய்ப்பு இல்லை" என்று ஓபனாக பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications