செய்தியாளர் கேட்ட கேள்வி.. இல்லிங்க நீங்க வேற.. கையெடுத்து கும்பிட்ட பேரறிவாளன்.. அப்படி என்னாச்சு?
சென்னை: இன்று செய்தியாளர் சந்திப்பில் பேரறிவாளன் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு பதில் அளித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று இதையடுத்து பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் பேட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொன்னார். அப்போது பேசிய அவர்.. தொடக்க காலத்தில் என்னுடைய பக்கத்து நியாயம் வெளியே வராமல் இருந்தது. அப்படியே வந்தாலும் அது சிறிய அளவிலேயே இருந்தது. ஆனால் அதன்பின் ஊடகத்தினர் உண்மை வெளியே வர உறுதுணையாக இருந்தனர். இந்த வழக்கு நடக்கும் காலங்களில் எனக்கு உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் நன்றி.

திருமணம்
இதையடுத்து நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. நான் இயல்பான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. நான் இயல்பாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் சிறைக்கு செல்லும் முன் இருந்தேன். திருமணம் உள்ளிட்ட எந்த விஷயம் பற்றியும் நான் யோசிக்கவில்லை. நான் சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புகிறேன்.

ஊடகத்திற்கு நன்றி
இப்போதுதான் நான் வெளியே வந்து இருக்கிறேன். வருங்கால வாழ்க்கை பற்றி யோசிக்கவில்லை. கொஞ்சம் மூச்சு விடுகிறேன். வேறு எதை பற்றியும் நான் யோசிக்கவில்லை. எனக்காக இருந்த, களத்தில் செயல்பட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஊடக நண்பர்கள் இல்லை என்றால் உண்மைகள் வெளியில் வந்து இருக்காது. என்று குறிப்பிட்டார்.

துன்பமான சட்ட போராட்டம்
நான் துன்பமான சட்ட போராட்டத்தை மேற்கொண்டேன். 31 ஆண்டுகால சிறை போராட்டத்தை ஒரு பேட்டியில் சொல்ல முடியாது. மரண தண்டனை வேண்டாம் என்பதில் தெளிவான நம்பிக்கை உள்ளவன். இதையடுத்து நீங்க அரசியல் தொடர்பாக எதுவும் பிளான் வைத்துள்ளீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். கொஞ்சம் அதிர்ச்சியாக அவரை பார்த்தவர் .. இல்லிங்க நீங்க வேற.. என்று கையெடுத்து கும்பிட்டு மறுப்பு தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications