12 நாட்களாக பைசா மாறாத பெட்ரோல் டீசல் விலை... வரும் காலங்களில் விலை எப்படி இருக்கும்?
சென்னை: கடந்த 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதன் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்தது.

அதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் விலையும் குறைய தொடங்கியது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் உயராமலேயே இருந்தது.
தொடர்ந்து 12ஆவது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 80.73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.83 ரூபாய்க்கும், டீசல் 87.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் 90.62 ரூபாய்க்கும் டீசல் 83.61 ரூபாய்க்கும் விற்பனை செய்யபுடுகிறது.
தற்போது சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65.72 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications