குட்நியூஸ்.. 15வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.. விலை என்ன?
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.

இந்தியாவில் கடந்த மாதம் தொடர்ச்சியாக 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. மார்ச் 6ம் தேதி வரை தினமும் பெட்ரோல் டீசல் விலை 30 பைசா முதல் 80 பைசா வரை உயர்ந்தது. இது மக்கள் இடையே பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் பட்சத்திலும் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து வந்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த இரண்டு வாரமாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 121 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 104 ரூபாயை தாண்டி உள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications