அட.. 25 நாட்களாக சென்னையில் உயராத பெட்ரோல், டீசல் விலை.. தொடர்ந்து 102+ ரூபாய்க்கு விற்பனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆசியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகம் விற்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும் இந்தியாவில் கடந்த 3 வருடங்களில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

 No change in the petrol, diesel price for the 25th consecutive day in Tamilnadu

எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த சுதந்திரம் வழங்கப்பட்டதில் இருந்தே பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தினமும் தொட்டு வருகிறது. ஒரு காலத்தில் 70 ரூபாய்க்கு விற்று வந்த பெட்ரோல் விலை வேகமாக உயர்ந்து தற்போது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 103 ரூபாயை தாண்டியும் கூட விற்கப்பட்டு வருகிறது.

இதெல்லாம் போக இதில் மத்திய அரசின் வரி காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுவாக தேர்தல் சமயங்களில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் தற்போது கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் இந்தியாவின் பெரு நகரங்களில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மற்ற பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை 103ஐ நெருங்கி வருகிறது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், கோவை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல், , நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை 102 -103 ரூபாய் என்ற விலையில் விற்கிறது.

மற்ற நகரங்களின் விவரம்

பெங்களூரில் பெட்ரோல் விலை 105.25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 95.28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை 107.83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை 101.84 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 89.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.81 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+