விஜய்க்கு குண்டு துளைக்காத கார், 'Z' பிரிவு பாதுகாப்பா? மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிரிவு பாதுகாப்பு மாற்றப்பட்டு இசட் பிரிவிற்கு மாற்றப்படுவதாக சொல்லப்படும் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின்படி மத்திய அரசு ஒய், இசட் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்புபடி 8 முதல் 11 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
விஜய் சுற்றுப்பயணம், மாநாடு போன்றவற்றிற்கு இந்த கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக விஜய்யின் பிரச்சாரத்தின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகிவிட்டனர்.
அது போல் விஜய் மீது காலணி வீச்சு நடந்ததாக காணொளி வெளியானது. இதனால் விஜய் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்திருந்த மனுவிலும் "மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு" என குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து விஜய்க்கு கொடுக்கப்பட்டிருந்த ஒய் பிரிவு போலீஸாரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. விஜய்க்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என சொல்லப்பட்டது. மேலும் விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் கிடைத்தன. இசட் பிரிவு பாதுகாப்பில் 4 முதல் 6 மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) கமாண்டோக்கள், 22 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவினர் இருப்பவர். மேலும் குண்டு துளைக்காத வாகனமும் பயன்படுத்தப்படும்.
விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பை நீக்கிவிட்டு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியான நிலையில் அதை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: புலனாய்வு அறிக்கைகள் அடிப்படையில் பெறப்பட்ட பரிந்துரையின் கீழ், அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications