சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்றைய விலையில் மாற்றமில்லை... பெட்ரோல் விலை ரூ.71.07... டீசல் விலை ரூ.65.70

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.07 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.70 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.

No change in todays price ... petrol price Rs 71.07 per liter, Diesel price Rs 65.70

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.

கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.

கச்சா எண்ணெயின் விலை 50 டாலருக்கும் கீழே சென்றது. இதனால் எரிப்பொருட்களின் விலையும் இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று பேரலுக்கு 1.26 டாலர் அதிகரித்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 49.78 டாலராக உள்ளது.

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.65.70க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

English summary
Petrol price in Chennai rs .70.85 Per liter, Diesel prices fell by 10 paise to sale Rs. 65.62, according to price notification issued by state fuel retailers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X