7வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாறவில்லை.. சென்னையில் லிட்டர் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் 7-ஆவது நாளாக இன்று பழைய விலைக்கே விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எள் முனை அளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 106.66, ஒரு லிட்டர் டீசல் ரூ 102.59 க்கு விற்பனையானது. இதுவே பெட்ரோல் டீசல் விற்பனையில் அதிகபட்ச விலையாக இருந்தது.

கலால் வரி
அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 ம், டீசல் விலை ரூ 10 ம் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது.

5 மாநில தேர்தல்
இதையடுத்து உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களால் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்தன. ஆனாலும் விலையேற்றம் இல்லை. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது.

தொடர் விலையேற்றம்
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. எனினும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை. இதையடுத்து 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து இந்த விலையேற்றம் இருந்து வருகிறது.
Recommended Video

20 நாட்களில் 6 நாட்கள்
மொத்தம் 22 நாட்களில் 8 நாட்களை தவிர மற்ற நாட்களில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டே வந்தது. கடந்த 6 தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 110.85 க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ 100.94 க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இந்த விலை மாறாமல் தொடர்ந்து 7-ஆவது நாளாக நீடித்து வருகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications